செப்டம்பரில் வெளியாகும் 'மியூசு' ஸ்மார்ட்போனின் எதிர்பார்ப்புகள் என்ன? ஒரு பார்வை

Written By:

ரெட்மி போலவே சீன நிறுவனத்தின் இன்னொரு பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான 'மியூசி' புதிய மாடல்களை விரைவில் வெளியிடுகிறது.இதற்காக செப்டம்பர் 5 ஆம் தேதி பிரஸ்மீட் நிகழ்ச்சி ஒன்றை இந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

செப்டம்பரில் வெளியாகும் 'மியூசு' ஸ்மார்ட்போனின் எதிர்பார்ப்புகள் என்ன?

மியூசூ U10 மற்றும் மியூசூ U20 மாடல்களில் உள்ள 6 சிறப்பு அம்சங்கள்

இந்த பிரஸ்மீட் நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்தும் இதில் அறிமுகமாகவுள்ள ஸ்மார்ட்போன் குறித்தும் பார்ப்போம்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

செப்டம்பர் 5 மற்றும் செப்டம்பர் 13- என இரண்டு நிகழ்ச்சியா?

ஏற்கனவே மியூசு U10 மற்றும் மியூசு U20 ஆகிய இரண்டு புதிய மாடல்களை சமீபத்தில் ரிலீஸ் செய்து பெரும் வரவேற்பை பெற்ற இந்நிறுவனம் செப்டம்பர் 5ல் மட்டுமின்றி செப்டம்பர் 13ஆம் தேதியும் என இரண்டு நிகழ்ச்சிகளை நடட்தி இருவித மாடல்களை வெளியீட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

செப்டம்பர் 5- வெளியாகும் பெரிய சைஸ் மியூசி மேக்ஸ்

ஏற்கனவே மியூசி நிறுவனம் செப்டம்பர் 5ஆம் தேதி பெரிய சைஸ் மேக்ஸ் போனை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது அதன் புகைப்படமும் கசிந்துள்ளது. அதுமட்டுமின்றி நாம் விசாரித்த வரையில் அன்றைய தினம் ரிலீஸ் ஆகும் ஸ்மார்ட்போனின் விலை ரூ.1799 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன வசதியெல்லாம் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும்?

மியூசு புரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 6 இன்ச் ஸ்கிரீன் மற்றும் 5 முதல் 7 இன்ஸ் டிஸ்ப்ளே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ரேம் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்ற்ம் பிளைம் ஓஎஸ் ஆகியவை அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 13 நிகழ்ச்சியில் என்ன நடக்கும்?

செப்டம்பர் 5ஆம் தேதி நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர் ஒரே வாரத்தில் மீண்டும் ஒரு நிகழ்ச்சியின் மூலம் மியூசு புரோ 7 ஸ்மார்ட்போனின் கர்வ் டிஸ்ப்ளே அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

மியூசு புரோ7 மாடலில் என்னென்ன வசதி இருக்கும்?

சாம்சங் கேலக்ஸி நோட் 7-ல் இருப்பது போன்று இதில் டூயல் வளைவு டிஸ்ப்ளே இருக்கும் என்றும், Exynos 8890 சிப்செட் உடன் 4GB ரேம் கொண்டது. மேலும் இதன் 12MP பின் கேமராவும் 5MP செல்பி கேமராவும் அனைவர் மனதையும் கொள்ளை கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Meizu, the Chinese smartphone manufacturer started sending the press invites for an event scheduled on September 5, which is less than two weeks from now.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்