மலிவு விலை ஸ்மார்ட்போன் மீஜூ M5 (Meizu M5) சிறப்பு அம்சங்கள்

By Siva
|

சீன நிறுவனமான மீஜூ (Meizu) சீனாவில் மிகப்பெரிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை கையில் வைத்துள்ள நிலையில் இந்நிறுவனம் அடுத்ததாக இந்திய வாடிக்கையாளர்களை குறி வைத்துள்ளது.

மலிவு விலை ஸ்மார்ட்போன் மீஜூ M5 (Meizu M5) சிறப்பு அம்சங்கள்

சமீபத்தில் சீனாவில் இந்நிறுவனம் வெளியிட்ட மீஜூ M5 மாடல் ஸ்மார்ட்போன் இரண்டு விதங்களில் வெளிவந்தது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.6900க்கும், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல் ரூ.8900க்கும் வெளியிட்டது.

ஜியோ ரெடி.! ஏர்டெல் ரெடியா.?? இந்தியாவின் மலிவான டிடிஎச் சேவை.!

ஆனால் இந்தியாவில் இந்த மாடலை வெளியிடும் தேதியை இந்நிறுவனம் அறிவிக்கவில்லை எனினும் இவ்வருட இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த மாடல் ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

டிசைன் மற்றும் டிஸ்ப்ளே எப்படி இருக்கும் தெரியுமா?

டிசைன் மற்றும் டிஸ்ப்ளே எப்படி இருக்கும் தெரியுமா?

மீஜூ M5 ஸ்மார்ட்போன் 5.2 இன்ச் டிஸ்ப்ளே உடன் 2.5D வளைந்த கண்ணாடி தன்மை கொண்டது. பாலிகார்பனேட்டால் தயாரிக்கப்பட்ட இதன் மாடல் ஸ்மார்ட்போன் மிண்ட் பச்சை, வெள்ளை, கோல்ட், புளூ மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கும்.

கேமிராவின் சிறப்பு தன்மை

கேமிராவின் சிறப்பு தன்மை

மாடல், டிசைன் ஆகியவை சுமாராக இருந்தாலும் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அம்சம் கேமிராதான். இந்த மீஜூ M5 ஸ்மார்டோனில் 13 எம்பி பின் கேமிராவில் டூயல்டோன் ப்ளாஷ் உள்லது. ஆட்டோ போகஸ் மற்றும் 5P லென்ஸ் உள்ளது பட்ஜெட் போனின் சிறப்பு அம்சங்கள் ஆகும்,. அதுமட்டுமின்றி 5 எம்பி செல்பி கேமிராவில் 4P லென்ஸ் உள்ளதால் செல்பி மிகவும் தெளிவாக விழும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிராஸசரின் முக்கியத்துவம் என்ன தெரியுமா?

பிராஸசரின் முக்கியத்துவம் என்ன தெரியுமா?

தொழில்நுட்ப விஷயங்கள் தெரிந்தவர்கள் முதலில் ஒரு ஸ்மார்ட்போனின் பிராஸசர் எப்படி உள்ளது தெரிந்து கொண்டு அதன்பின்னர் தான் மற்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்த வகையில் இந்த மீஜூ M5 ஸ்மார்ட்போன் மெடியாடெக் MT 6750 ஆக்டோகொர் பிராஸசரை கொண்டுள்ளது. மேலும் இந்த சிபியூ 2ஜிபி அல்லது 3ஜிபி LPDDR3 ரேம்-ஐ உள்ளடக்கியுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் Yun OSஐ கொண்டுள்ளதுதான் இதன் தனிச்சிறப்பு.

பெரிய பேட்டரியும் அபாரமான கனெக்டிவிட்டியும்

பெரிய பேட்டரியும் அபாரமான கனெக்டிவிட்டியும்

என்னதான் நல்ல போனாக இருந்தாலும் உடனே சார்ஜ் இறங்கிவிட்டால் அதை எத்தனை ஆயிரங்கள் கொடுத்து வாங்கினாலும் பயனில்லை. அந்த வகையில் இந்த மீஜூ M5 ஸ்மார்ட்போன் மாடலில் சக்திவாய்ந்த 3070mAh பேட்டரி. இந்த பேட்டரி 66 மணி நேரம் சார்ஜ் நிற்கும் தன்மை உடையது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இதன் கனெக்டிவிட்டி தன்மைகளான 4G, வைபை, புளூடூத் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவை எதிர்பார்த்ததுபோல் அருமையாக உள்ளது.

மற்ற சிறப்பு அம்சங்கள் என்ன?

மற்ற சிறப்பு அம்சங்கள் என்ன?

மீஜூ M5 ஸ்மார்ட்போனில் விலை உயர்ந்த மாடலில் உள்ளது போன்று ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது. இந்த பிங்கர்பிரிண்ட் சென்சார் இரண்டே நொடிகளில் தனது வேலையை முடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நானோ சிம்களை போடும் வசதி, 128 ஜிபி வரை SD கார்டு போடும் வசதி, ஆகியவைகளும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Meizu M5 features a 5.2-inch HD display and is powered by an Octa-Core MediaTek CPU.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X