செல்பீ பிரியரா நீங்கள்..உங்கள் மொபைலில் இதெல்லாம் இருந்தே ஆகனுமே.!

செல்பீ எடுப்பதற்கு இந்த வசதிகள் எல்லாம் உங்கள் மொபைலில் உள்ளதா?

Written By:

செல்பி எடுத்துக்கொள்வது இப்போது பலராலும் விரும்பப்படுகிற ஒன்று. ஒற்றை செல்பி கூட எடுக்காது ஒரு நாளை முழுவதுமாக கழிக்கிறவர்களை இப்போதைய நாட்களில் பார்ப்பது கடினம் தான். ஏனெனில் ஸ்டுடியோக்களில் கேமராவுக்கு பிறகு உம்மென்று முகத்தை வைத்து புகைப்படக்காரர் 'ஸ்மைல் ப்ளீஸ்' என்ற உடன் வெறுமனே செயற்கைச் சிரிப்பினை உதிர்த்து நம்மை புகைப்படம் எடுத்துக்கொண்ட காலம் போய் இயல்பாக நமது வாழ்வின் மகிழ்ச்சிக்குரிய தருணங்களை தனியாகவோ,நண்பர்களோடோ,குடும்பத்தாரோடோ நமக்குள் இருக்கிற அழகியல் உணர்ச்சியோடு பதிவு செய்து வைத்துக்கொள்கிற வாய்ப்பினை செல்பி உருவாக்கித் தந்திருப்பதால் இப்போது செல்பி எடுப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

அத்தனை மகிழ்ச்சிக்குரிய நம்மை நமக்கு பிடித்த விதங்களில் பதிவு செய்துக்கொள்ள உதவுகிற செல்பிக்களை எடுக்க உதவுகிற உங்கள் மொபைலில் இதெல்லாம் இருந்தால் உங்கள் செல்பி இன்னும் அழகாகும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பனோராமிக் செல்பி:

பெரிய குழுக்கள் அடங்கிய உங்கள் நண்பர்களோடோ குடும்பத்தாராடோ செல்பி எடுத்துக்கொள்வது எப்போதுமே கடினமான ஓர் விஷயம் தான்.ஏனெனில் உங்கள் குழு முழுவதுமாய் கேமராவிற்குள் அடக்குவது கடினம் அதற்கு நீங்கள் நீண்ட கைகளோ,பெரிய கேமராக்களை கொண்டிருந்தால்தான் கொண்டிருக்க வேண்டும் அப்படி ஏதும் என்னிடம் இல்லை என்கிறீர்களா இது ஏதும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஓப்போ எப்1,எச்டிசி டிசையர் 10ப்ரோ போன்ற போன்களில் உள்ளது போன்ற பனோராமிக் செல்பி எடுக்கிற வசதி உங்கள் போனில் இருந்தால் போதும் எவ்வளவு பெரிய குழுவையும் நீங்க செல்பி எடுக்கலாம்.

பிரண்ட் கேமரா பிளாஷ்:

ஒளி குறைந்த இடத்திலோ, மாலை மற்றும் சிலதருணங்களில் செல்பீ எடுத்திட பிராண்ட் கேமராவில் பிளாஷ் தேவை இல்லாவிட்டால் தெளிவான புகைப்படங்களை செல்பி மூலம் பதிவு செய்ய இயலாது ஆகவே உங்கள் போனில் பிரண்ட் கேமராவில் பிளாஷ் இருக்க செக் பண்ணிக்கோங்க.

இரண்டு பிரண்ட் கேமரா:

இப்போது விவோ வி 5,ஐபோன் 7பிளஸ் போன்றே வெளிப்படுகிற பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் இரண்டு பிரண்ட் கேமராக்களை கொண்டு வெளியிடப்படுகின்றன இந்த வகை போன்களில் செல்பி எடுத்தால் இன்னும் அழகாகவும் ,தெளிவாகவும் துல்லியத்தன்மையுடனும் பதிவாகும்.முதல் கேமரா உங்களையும் இரண்டாவது கேமரா பின்புறத்தையும் பதிவு செய்வதால் தெளிவாக புகைப்படங்கள் பதிவாகும்.

வாய்ஸ் ஷட்டர்;நோ பட்டன்:

பெரும்பாலான நேரங்களில் நாம் செல்பி எடுக்கிற போது ஷட்டர் பட்டனை கொண்டு புகைப்படம் எடுக்க கடினமாக இருக்கும் பலவிதங்களில் நாம் போஸ் கொடுக்கவும் இயலாது ஷட்டர் பட்டனை தொடுவதற்குள்ளே நமது போஸ் மாறிப்போகும் இனி அந்த கவலை வேண்டாம் கேலக்ஸி எஸ் 7எட்ஜ் போன்ற ஸ்மார்ட்போன்களில் வாய்ஸ் ஷட்டர் முறை உள்ளதால் 'சீஸ்' 'ஸ்மைல்' போன்ற வார்த்தைகளை உச்சரித்தாலே தானாக புகைப்படம் பதிவாகும்.உங்களுக்கு நேரமும் மிச்சமாகும்.

கண்கள் வழி :

ஹானர் 6 எக்ஸ் போன்ற ஸ்மார்ட்போன்களில் நாம் செல்பி எடுக்கவேண்டுமெனில் நமது கண்களுக்கு நேரே குறிப்பிட்ட நேரம் வைத்திருந்தோமானால் மிகச் சிறிய பிரிவியூ திரையில் காட்டப்படும் பின்பு புகைப்படம் பதிவாகும் .

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
ove selfies make sure your smartphones have these features.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்