
இந்த எல்சிடி பேனல் மூலம் 1920 X 1080 பிக்ஸல் துல்லியத்தில் காட்சிகளையும் தகவல்களையும், தெள்ள தெளிவாக பார்க்க முடியும்.
சில ஸ்மார்ட்போன்களில் திரைகள் தகவல்களையும், காட்சிகளையும் தெளிவாக காட்டுவதில்லை என்பது போன்ற கருத்தும் வாடிக்கையாளர்களிடம் நிலவி வருகிறது.
எல்ஜி நிறுவனத்தின் ஸ்மார்ட்போனின் திரைகள் துல்லியம் கொண்டதாக இருப்பினும், 5 இஞ்ச் கொண்ட எச்டி எல்சிடி பேனலை உருவாக்கி உள்ளது எல்ஜி நிறுவனம்.
டிவி, கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் எப்படி காட்சிகளை தெளிவாக பார்க்க முடியுமோ அதே போல், எல்ஜி நிறுவனத்தின் இந்த எச்டி எல்சிடி பேனலை பயன்படுத்தி எதையும் தெளிவாக பார்க்கலாம்.
இந்த புதிய வசதியினை அளிக்கிறது எல்ஜி நிறுவனம். இந்த ஆண்டில் எல்ஜி எச்டி எல்சிடி பேனைலை இந்நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





























