லினோவா வைப் Z மொபைலின் கேமரா படங்களை பாருங்க...!

Posted by:

இன்றைக்கு மொபைல் சந்தையில் தனக்கென ஒரு நிரந்திர இடத்தை பிடித்துவிட்டது லினோவா மொபைல்கள் எனலாம்.

தற்போதைய லினோவாவின் மிகப்பெரும் ஹிட் மொபைல் எது என்றால் அது லினோவாவின் வைப் Z மொபைல் தாங்க இது தற்போது விற்பனையிலும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறதுங்க.

அந்த மொபைலில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன என்பதை பற்றி கொஞ்சம் பார்க்கலாமாங்க இதோ.

5.5 இன்ச் நீளம் இருக்கும் இந்த மொபைல் ஸ்கீரின்களில் ஸ்கேரட்ச் ஆகாத கொரில்லா கிளாஸூடன் வெளிவருதுங்க மற்றும் இந்த மொபைலில் 13 MP கேமரா கொண்டுள்ளது, இதன் பிரன்ட் கேமரா 5MP அளவிலும் உள்ளது இதனால் இதன் கேமரா கிளாரிட்டி நிச்சயம் நன்றாக இருக்கும் என கூறலாம்ங்க.

மேலும், அடுத்து இதில் 2.2GHz ஸ்னேப்டிராகன் பிராஸஸர் உள்ளது இது மிகவும் வேகமாக இயங்கக்கூடிய பிராஸஸர்களில் ஒன்றாகும்.

இந்த மொபைல் ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.3 இல் இயங்கக்கூடியதாகும் அதனுடன் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் மெகா ஹிட் வரவான கிட்கேட் அப்டேட்டும் இதில் கிடைக்கும்.

அடுத்து இதில் மற்றொரு புதிய வசதி இதில் என்னவென்றால் 4G வசதியும் உள்ளது என்பது இந்த மொபைலின் சிறப்பு எனலாம்ங்க மேலும் 16GB இன்பில்டு மெமரியுடன் வெளிவரும் இந்த மொபைலில் மெமரி கார்டு ஆப்ஷனும் இருக்குங்க இதன் பேட்டரி திறன் 3000mAh ஆகும் இதை லினோவாவின் மொபைல் ஸ்டோரில் வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

இதோ வைப் Z மொபைலில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களின் தொகுப்பு உங்களுக்காக...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

இதில் 13MP க்கு கேமரா இருப்பதால் இதில் எடுக்கப்படும் அனைத்து படங்களும் மிகவும் துல்லியமாக நமக்கு கிடைக்கின்றன

#2

இதன் கேமரா மேக்ரோ ஷாட் என்னும் துல்லியமாக படம் எடுக்கும் திறனை இதில் கொண்டுள்ளது இதன் மூலம் நாம் எவ்வளவு சூம் செய்து படம் எடுத்தாலும் துல்லியமாக நமக்கு தெரியும்

#3

இதில் பனோரமா ஷாட் எனப்படும் 360 டிகிரிக்கு சுற்றி எடுக்கக்கூடிய புகைப்பட ஆப்ஷனும் உள்ளது இதோ அந்த படத்தின் கிளாரிட்டி

#4

இதில் நைட் மோட் ஆன் செய்து எடுக்கப்பட்ட படத்தை தான் தற்போது நீங்கள் படத்தில் காண்கிறிர்கள்.. இதன் கிளாரிட்டியும் மிக அருமை எனலாம்

#5

இதில் HDR மோட் என்ற ஒரு ஆப்ஷன் இருக்குங்க அதாவது இந்த மோடில் நீங்களஅ படம் எடுத்தால் இரண்டு படங்கள் உங்களது மொபைலில் பதிவாகும் அவற்றில் எது பெஸ்ட் என்பதை நீங்கள் செலக்ட் செய்துவிட்டு மற்றொன்றை அழித்து விடலாம்

#6

இதன் கேமரா மூலம் குறைந்த வெளிச்சத்திலும் நாம் மிகவும் துல்லியமாக படம் பிடிக்க முடியும் இதோ இந்த படத்தை பாருங்கள்

#7

பொதுவாக மொபைல்களில் நாம் ஒரு சமயத்தில் ஒரே ஒரு கேமராவை மட்டும் தான் இயக்க முடியும் ஆனால் இந்த மொபைலில் ஒரே சமயத்தில் இரண்டு கேமராக்களையும் இயக்கலாம் இதோ அந்த படம்

#8

இதோ இங்கு நீங்கள் பார்க்கும் இந்த இரண்டு படங்களில் ஒன்று வைப் Z ல் எடுத்தது மற்றொன்று கூகுள் நெக்ஸஸ் 5ல் எடுத்தது இதோ அதன் வித்தியாசத்தை பாருங்க.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்