லெனோவா K6 பவர் vs சியாமி ரெட்மி 3s. இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள்-ஒற்றுமைகள் என்னென்ன?

சமீபத்தில் வெளியான சீன நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் லெனோவா K6 பவர் ஸ்மார்ட்போன், சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த மாடலின் மிகப்பெரிய சிறப்பு இதன் பேட்டரிதான்.

Written By:

சமீபத்தில் வெளியான சீன நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் லெனோவா K6 பவர் ஸ்மார்ட்போன், சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த மாடலின் மிகப்பெரிய சிறப்பு இதன் பேட்டரிதான்.

லெனோவா K6 பவர் vs சியாமி ரெட்மி 3s

இதன் பேட்டரி கிட்டத்தட்ட சியாமி ரெட்மி 3 மாடலுக்கு இணையாக இருந்தது. ஆனால் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் சற்று பெரியதுதான்.

சபாஷ் சரியான போட்டி : ஐடியாவும் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்கியது.!

இந்நிலையில் லெனோவா K6 பவர் மற்றும் சியாமி ரெட்மி 3 மாடல்களுக்குள் வேறு என்னென்ன ஒற்றுமைகள் இருக்கின்றது என்பதையும் இரண்டிற்கும் உள்ள சில வேறுபாடுகளையும் தற்போது பார்ப்போம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்க்ரீனை பொருத்தவரை லெனோவாதான் கிங்

லெனோவா K6 பவர் மற்றும் சியாமி ரெட்மி 3 மாடல்களின் ஸ்க்ரீனை ஒப்பிடும்போது இரண்டுமே 5 இன்ச் ஸ்க்ரீன்களை கொண்டிருந்தாலும் லெனோவா K6 மாடல் ஸ்க்ரீன் 1080P பிக்சல் மற்றும் 440PPI டென்சிட்டியை பெற்றது. ஆனால் அதே நேரத்தில் ரெட்மி 3s 720P பிக்சல் உடன் 294 டென்சிட்டியையும் பெற்றது. எனவே ஸ்க்ரீன் பிக்சலை பொருத்தவரை லெனோவாதான் கிங் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

இரண்டிலும் ஒரே சாப்ட்வேர்தான்

லெனோவா K6 பவர் மற்றும் சியாமி ரெட்மி 3 மாடல்களின் ஸ்மார்ட்போன்களில் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 சிப்டெட் தான் உள்ளது. மேலும் ஆக்டோகோர் சிப், 1.4 GHz தன்மை உடையது. மேலும் அட்ரினோ 505 GPU கிராபிக் பெர்பாமன்ஸூக்கு உதவும்

மேலும் சியாமி ரெட்மி 3 ஸ்மார்ட்போனில் 2 GB ரேம் மற்றும் 16 GB இண்டர்னல் ஸ்டோரேஜ். 3GB மற்றும் 32 இண்டர்னல் ஸ்டோரேஜென்ற கெப்பாசிட்டியில் உள்ளது. அதே சமயத்தில் லெனோவா K6 ஸ்மார்ட்போனில் 3GB ரேம் மற்றும் 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ் என்ற ஒரே மாடல் தன்மையுடன் உள்ளது. இரண்டிலுமே மெமரி கார்ட் சப்போர்ட் செய்யும் வகையில் உள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கிட்டத்தட்ட இரண்டிலும் ஒரே கேமிராதான்

லெனோவா K6 பவர் மற்றும் சியாமி ரெட்மி 3 ஆகிய இரண்டு மாடல்களின் ஸ்மார்ட்போன்களில் 13 MP சென்சார் கொண்ட பின் கேமிராக்கள் உள்ளன. மேலும் இரண்டிலும் LED ப்ளாஷ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் செல்பி கேமிராவை பொருத்தவரையில் லெனோவா K6 ஸ்மார்ட்போனில் 8 MP சென்சாரும்,

சியாமி ரெட்மி 3 ஸ்மார்ட்போனில் 5 MP சென்சாரும் உள்ளது. செல்பியை பொருத்தவரையில் லெனோவா K6 போன் முந்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இரண்டிலும் ஆண்ட்ராய்ட் அம்சம் எப்படி இருக்கும்ன்னு தெரியுமா?

லெனோவா K6 பவர் மற்றும் சியாமி ரெட்மி 3 ஆகிய இரண்டு மாடல்களின் ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மாலோ தன்மை உள்ளதால் இந்த விஷயத்தை பொருத்தவரையில் இரண்டிற்கும் சம அளவு மார்க் கிடைக்கின்றது.

USP பேட்டரி இரண்டிலும் இருக்குதா?

லெனோவா K6 பவர் மற்றும் சியாமி ரெட்மி 3 ஆகிய இரண்டு மாடல்களின் ஸ்மார்ட்போன்களில் USP பேட்டரி இணைக்கப்பட்டிருந்தாலும் லெனோவா K6 பவர் ஸ்மார்ட்போனில் 4000mAh பேட்டரியும், சியாமி ரெட்மி 3 ஸ்மார்ட்போனில் மிகச்சிறிய வேறுபாட்டுடன் அதாவது 4100mAh பேட்டரியும்உள்ளது.

முடிவா என்ன சொல்ல வர்றோம்

லெனோவா K6 பவர் மற்றும் சியாமி ரெட்மி 3 ஆகிய இரண்டு மாடல்களும் ஒன்றுக்கொன்று சோர்வடையாத வகையில் ஒருசில விஷயங்களில் மாறுபட்டும் பெரும்பாலும் ஒன்றுபட்டும் உள்ளது. கேமிரா மற்றும் டிஸ்ப்ளேவில் சிறிய வித்தியாசங்கள் இருந்தாலும் இரண்டிற்கும் பெரிய வேறுபாடு டெக்னிக்கலாக இல்லை.

லெனோவா K6 3GB ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட்டில் ரூ.9,999க்கு கிடைக்கின்றது. இந்த மாடல் இந்த ஒரே வகை மாடலில்தான் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் ரெட்மி 3S மாடல் 2 GB ரேம் கொண்டது ரூ.6,999 என்ற விலையிலும் 3 GB ரேம் கொண்டது ரூ.8,999 என்ற விலையிலும் சந்தையில் கிடைக்கின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
The Lenovo K6 Power is the latest smartphone from the Chinese tech giant, and the name itself suggest that it is a battery-centric phone. Read on.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்