குவால்காம் நிறுவனத்துடன் கூட்டு பிரபல நிறுவனத்தின் வெற்றி ரகசியம்.!!

Written By:

இன்று வெளியாகும் ஸ்மார்ட்போன் கருவிகளில் குவால்காம் பிராசஸர் பெரும்பாலான கருவிகளில் கட்டாயம் வழங்கப்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு லீ இகோ, குவால்காம் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்திருக்கின்றது. குவால்காம் பிராசஸர் கொண்ட லீஇகோ சூப்பர்போன் கருவிகள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எத்தனைச் சக்தி வாய்ந்த பிராசஸர் என்றாலும், மோசமாக வடிவமைக்கப்பட்ட கருவிகளில் சரியான வேலை செய்யாது. அந்த வகையில் லீ இகோ நிறுவனம் அதிக சக்தி வாய்ந்த கருவிகளை வழங்கி வருகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அம்சம்

உலக தரம் வாய்ந்த வடிவமைப்பு, CDLA, சக்தி வாய்ந்த கேமரா மற்றும் அதிநவீன கைரேகை ஸ்கேனர் போன்ற அம்சங்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்களுடன் இணைந்து இயங்கும் போது சூப்பர்போன் புது வித அனுபவத்தை வழங்குகின்றன.

கருவிகள்

லீஇகோ நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை சூப்பர்போன் கருவிகள் சக்தி வாய்ந்தவை என்பதோடு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதங்களில் பயன் தரும் கருவியாகவும் இருக்கின்றது.

பயன்பாடு

குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் மூலம் சக்தியூட்டப்பட்ட லீஇகோ சூப்பர்போன் மின்னஞ்சல் சரிபார்த்தல், இசையை அனுபவித்தல், குறுந்தகவல் அனுப்புதல் என எதைச் செய்தாலும் கருவி சிறப்பாக இயங்குகின்றது.

கூட்டு

குவால்காம் தொழில்நுட்பம் மற்றும் லீஇகோ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கப்பட்ட கருவி பயனர்களை கவர்ந்திழுப்பதோடு புதிவித அனுபவத்தையும் வழங்குகின்றது. எச்டி ஆடியோ, காணொளி மற்றும் கேமிங் என எதைச் செய்தாலும் கருவி சீராக இயங்குகின்றது.

பிராசஸர்

குவால்காம் நிறுவனம் லீஇகோ நிறுவனத்தின் சூப்பர்போன்களை உலகின் தலைசிறந்த பிராசஸர்களான ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 652 மற்றும் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 820 வழங்குகியுள்ளது. இதன் காரணமாகவே லீ இகோ நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை சூப்பர்போன்களான லீ2 மற்றும் லீ மேக்ஸ்2 நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
LeEco Works with Qualcomm to offer smooth running devices, loaded with content service
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்