2 நொடியில் 70,000 கருவிகள் விற்பனை சந்தையில் மூன்று சாதனை படைத்த நிறுவனம்.!!

Written by: Super

விற்பனை துவங்கிய 2 நொடிகளில் சுமார் 70,000 லீ 1எஸ் கருவிகளை விற்பனை செய்து லீஈகோ நிறுவனம் சாதனை புரிந்திருக்கின்றது. ப்ளாஷ் விற்பனைக்கு முன்பாக இந்த கருவியை வாங்க சுமார் 605,000 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இவை இந்திய சந்தையில் புதிய சாதனையாக கருதப்படுகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சாதனை

ஒரே ப்ளாஷ் விற்பனையில் அதிக கருவிகள் விற்பனை, குறைந்த நேரத்தில் அதிக விற்பனை மற்றும் அதிக முன்பதிவு உட்பட மொத்தம் மூன்று சாதனைகளை லீஈகோ நிறுவனம் புரிந்திருக்கின்றது.

விலை

அதிக சிறப்பம்சங்கள், குறைந்த விலை, மற்றும் அட்டகாசமான வடிவமைப்பு இந்த சாதனைக்கு வித்திட்டிருக்கின்றது எனலாம்.

அம்சங்கள்

ரூ.10,999க்கு லீ 1எஸ் கருவியில் உலகின் முதல் மிரர்-சர்ஃபேஸ் கைரேகை ஸ்கேனர், 5.5 இன்ச் திரை, 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளன.

கனெக்டிவிட்டி

டூயல் சிம் ஸ்லாட், 4ஜி எல்டிஈ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.

க்விக் சார்ஜ்

இதோடு லீ 1எஸ் கருவியை 5 நிமிடம் சார்ஜ் செய்தால் 3.5 மணி நேரத்திற்கு டாக்டைம் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
LeEco sells 70,000 phones in 2 seconds and creates 3 industry records
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்