டூயல் கர்வ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 835 உடன் லீஈகோ கருவி.!

LeEco வின் அடுத்த மாடலில் என்னென்ன புதிய வசதிகல் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

By Siva
|

சீன நிறுவனத்தின் LeEco இந்தியாவில் ஒருசில மாடல்களை அறிமுகம் செய்திருந்தாலும் இன்னும் குறிப்பிடத்தக்க அளவில் வாடிக்கையாளர்களை பெரிதாக கவரவில்லை. இருப்பினும் தனது முயற்சியை விடாமல் புதிய புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொள்ள முயற்சி செய்து வருகிறது.

டூயல் கர்வ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 835 உடன் லீஈகோ கருவி.!

அந்த வகையில் சமீபத்தில் LeEco நிறுவனத்தின் புதிய மாடலான LeEco Le புரோ 3 எலைட் என்ற மாடல் சீனாவில் பட்ஜெட் போனாக அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக புதிய டெக்னாலஜியுடன் இன்னும் ஒருசில மாதங்களில் புதிய மாடல் ஒன்றை முற்றிலும் வித்தியாசமாக வெளியிட முடிவு செய்துள்ளது.

பல மாடல் போன்கள் குறித்து விமர்சனம் செய்யும் Gsmarena என்ற இணையதளம் இந்த புதிய LeEco Le புரோ 3 எலைட் மாடல் குறித்து கூறியபோது, இந்த மாஅலில் டூயல் கர்வ் டச் ஸ்க்ரீன் இருப்பதாகவும், அதுமட்டுமின்றி குவால்கோமின் லேட்டஸ்ட் டெக்னாலஜியான ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் இருப்பதாகவும் உறுதி செய்துள்ளது.

டூவல் கேம், 4ஜிபி ரேம் கொண்ட எப்3 ப்ளஸ் (விலை, அம்சங்கள்).!

தற்போது பிரபல ஆகி வரும் டூயல் கர்வ் ஸ்க்ரீனை கொண்டு வரும் இந்த போன் இந்த ஆண்டின் வித்தியாசமான போன்களில் ஒன்றாக இருக்கும் என்பதி எவ்வித ஐயமும் இல்லை

டூயல் கர்வ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 835 உடன் லீஈகோ கருவி.!

மேலும் இந்த மாடலின் இரண்டு புகைப்படங்கள் சீனாவின் முன்னணி ஊடகத்தில் வெளிவந்துள்ளது. முதல் படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது என்னெவெனில் இதுவொரு அகலமான பெஸல் தன்மை உடையது என்றும் மாடலின் அடியில் இருக்கும் டச் பட்டன்கள் இந்த போனை இயக்க உதவும் என்றும் தெரிகிறது.

மேலும் லைட் சென்சார், செல்பி கேமிரா, காதில் வைக்கும் ஆடியோ வசதி உள்பட ஒருசில வசதிகள் இதில் இருக்கும் என்று லீக் ஆன புகைப்படத்தில் இருந்து அறிந்து கொள்ள் முடிகிறது

டூயல் கர்வ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 835 உடன் லீஈகோ கருவி.!

இரண்டாவது படத்தில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்னெவெனில் டூயல் கர்வ் டிஸ்ப்ளே இந்த மாடலில் இருக்கின்றது என்றும், மேலும் மிகவும் மெல்லிய எட்ஜ்களை கொண்டது என்றும் தெரிகிறது. மேலும் யூஎஸ்பி டைப்பில் ஒரு போர்ட் மற்றும் ஸ்பீக்கர் இணைக்கும் வசதி இதில் உள்ளது. அதேபோல் 3.5 மிமி அளவில் ஹெட்செட் ஜேக் ஒன்றும் இதில் இணைந்திருக்க வாய்ப்பு உள்ளது

சாம்சங், ஆப்பிள், கூகுள் எல்லாமே காலி - நோக்கியா பி1 அம்சங்கள்.!?

மேலும் இந்த மாடலில் 6GB ரேம் மற்றும் 256 GB இன்னர் ஸ்டோரேஜ் வசதி இருக்கும். இந்த மாடல் வரும் ஏப்ரல் மாதத்திலேயே வெளிவர வாய்ப்பு உள்ளது.

மேலும் இந்தியாவில் LeEco நிறுவனம் பெங்களூரி, மும்பை மற்றும் டெல்லியில் அலுவலகங்களை கிட்டத்தட்ட 85% இந்திய ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த நிறுவனத்தில் சிஓஓ வாக பணிபுரிந்து கொண்டிருந்த அதுல் ஜெயின் மற்றும் டெபாஷிஷ் கோஷ் ஆகியோர் ராஜினாமா செய்து விட்டதாகவும் பெருகி வரும் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இந்த நிறுவனத்தால் போட்டி போட முடியவில்லை என்றும் ஒருசில செய்திகள் கூறி வருகின்றன.

Best Mobiles in India

English summary
Chinese smartphone maker LeEco is working on a flagship smartphone that will come with a dual-curved display and the flagship Snapdragon 835 CPU

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X