புதிய நிறத்தில் வெளியாகும் சூப்பர்போன்.!

Written By:

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சமீபத்தில் வெளியாகும் கருவிகளில் தவிர்க்க முடியாத நிறங்களில் ஒன்றாக கிரே எனப்படும் சாம்பல் நிறம் இருக்கின்றது. அழகிய வடிவமைப்பு கொண்ட கருவிகளை மேலும் அழகாக காட்சிப்படுத்துவதில் சாம்பல் நிறம் அதிக பங்கு வகிக்கின்றது.

சாம்பல் நிறம் பெரும்பாலானோருக்கும் பிடித்தமான ஒன்று எனலாம். இதனாலேயே கருவிகளின் விற்பனை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு கருவிகளும் சாம்பல் நிறத்தில் பிரத்தியேகமாக வெளியிடப்படுகின்றன.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சூப்பர்போன்

குறைந்த காலகட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் லீஇகோ நிறுவனம் தனது புதிய சூப்பர் போன் கருவியின் சாம்பல் நிற பதிப்பினை வெளியிட இருக்கின்றது.

விற்பனை

இந்தியாவில் லீ2 கருவியானது ரோஸ் கோல்டு நிறத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் இந்தக் கருவியின் சில்வர் நிற பதிப்பு வெளியிடப்படுகின்றது.

அம்சங்கள்

லீ 2 கருவியில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி திரை, பெரிய கருவிகளில் மட்டும் வழங்கப்படும் இன்-செல் டிஸ்ப்ளே திரை வழங்கப்பட்டுள்ளது. லீ 2 கருவியில் யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் அதிவேகமாகச் சார்ஜ் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

சலுகை

லீ 2 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.4990 மதிப்புடைய ஒரு ஆண்டு லீ இகோ சந்தா, வோடாஃபோன் சேவையில் டபுள் டேட்டா போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விற்பனை

லீ2 கருவிகள் பிளிப்கார்ட் இணையதளம் மற்றும் லீஇகோ நிறுவனத்தின் லீமால் தளங்களில் விற்பனை செய்யப்படுகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
LeEco’s Le 2 to debut in ‘My Grey’ Color Variant
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்