ஜியோ சேவையைப் பெற்ற பிரபல நிறுவனம்.!!

By Meganathan
|

குறைந்த காலகட்டத்தில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து விட்ட தொழில்நுட்ப நிறுவனமான லீஇகோ, ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்துள்ளது. இதைத் தொடர்ந்து லீஇகோ கருவிகளுக்கும் ஜியோ பிரீவியூ சேவைக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ பிரீவியூ சேவையின் மூலம் அனைத்து வாய்ஸ் கால், அன்-லிமிட்டெட் 4ஜி இண்டர்நெட் மற்றும் குறுந்தகவல் போன்றவை டிசம்பர் மாதம் வரை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

லீஇகோ பயனர்கள் தங்களது சூப்பர் கருவிகளுடன் அன்லிமிட்டெட் சேவையை எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக அனுபவிக்க முடியும். மேலும் பயனர்களுக்கு தகுந்த திட்டத்தினை அவர்கள் ரிலையன்ஸ் ஜியோ இணையதளத்தில் இருந்து பதிவு செய்து கொள்ள முடியும்.

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோவுடனான ஒப்பந்தம் குறித்து அதுல் ஜெயின் கூறும் போது 'வாடிக்கையாளர்களுக்குத் தடையில்லா தொடர்பு அமைப்புதனை வழங்கும் நோக்கம் கொண்ட லீஇகோ தலைசிறந்த வன்பொருள், மென்பொருள் மற்றும் இதர சேவைகளை கச்சிதமாக வழங்கியுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி:

மகிழ்ச்சி:

முன்னதாக தலைசிறந்த சூப்பர் கருவிகளின் மூலம்பயனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய லீஇகோ, ஜியோவின் வரம்பற்ற இண்டர்நெட் இணைப்பு மூலம் இதுவரை இல்லாதளவு தடையில்லா 4ஜியை அனுபவிக்க வழி செய்யும்.

ஜியோ பிரீவியூ:

ஜியோ பிரீவியூ:

வாடிக்கையாளர்கள் ஜியோ பிரீவியூ சேவையினை லீ 1எஸ், லீ 1எஸ் இகோ, லீ மேக்ஸ் மற்றும் லீ மேக்ஸ் 2 போன்ற அனைத்து லீஇகோ சூப்பர்போன்களிலும் பயன்படுத்த முடியும். வோல்ட்இ அழைப்புகளை லீ 2 மற்றும் லீ மேக்ஸ் 2 கருவிகளில் அதிக தரத்துடன் அனுபவிக்க முடியும்.

லீஇகோ பயனர்:

லீஇகோ பயனர்:

முதல் தலைமுறை லீஇகோ பயனர்கள் ஜியோ ஆப்களை டவுன்லோடு செய்து ஜியோ வாய்ஸ் கால் சேவைகளை அனுபவிக்க முடியும். இந்தியாவில் அறிமுகமானதில் இருந்து லீஇகோ சூப்பர்போன் கருவிகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

ஸ்மார்ட்போன்:

ஸ்மார்ட்போன்:

ஒட்டு மொத்த ஸ்மார்ட்போன் சந்தையைத் திருப்பி பார்க்க வைக்கும் அம்சங்கள் கொண்ட கருவிகளை மிகக் குறைந்த விலையில் வழங்கிய லீஇகோ தொடர்ந்து இந்தியாவில் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

சூப்பர்போன்:

சூப்பர்போன்:

லீஇகோ சூப்பர்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஆண்டு இலவச லீஇகோ சந்தா வழங்கப்படுகின்றது. இதன் மூலம் பயனர்கள் அதிகளவு இசை, திரைப்படம், மற்றும் நேரலைத் தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்றவற்றை அனுபவிக்க முடியும்.

செயலி:

செயலி:

ஜியோ பிரீவியூ சேவையைப் பெற முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மைஜியோ செயலியை டவுன்லோடு செய்து (கூப்பன் கோடு) சலுகை குறியீடு ஒன்றைப் பெற வேண்டும். குறியீடு கிடைத்தவுடன் அருகாமையில் இருக்கும் ரிலையன்ஸ் ஸ்டோரினை அறிந்து கொள்ள முடியும்.

ஜியோ சிம்:

ஜியோ சிம்:

பின் நேரடியாக ரிலையன்ஸ் ஸ்டோர் சென்று அனைத்து வித அடையாள சான்று மற்றும் புகைப்படங்களையும் சமர்ப்பித்து ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை வாங்கிக் கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
LeEco partners with Reliance Jio for its “Jio Welcome Offer”

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X