லீ மில்லியன் ஜாய் ஆஃபர் இதென்ன புதுசா இருக்கு.??

Written By:

லீஇகோவின் லீ மில்லியன் ஜாய் சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. லீஇகோ சூப்பர்போன் கருவிகளான லீ 2, லீ மேக்ஸ்2 மற்றும் லீ 1எஸ் இகோ போன்ற கருவிகள் லீமால் இணையதளம் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் அதிரடி சலுகையில் விற்பனை செய்யப்படுகின்றன.

வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்திருக்கும் புதிய சலுகைகள் லீஇகோ கருவிகளின் விற்பனை உயர்ந்திருக்கின்றது. லீஇகோ நிறுவன கருவிகளை சுமார் 1 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மைல்கல்

புதிய மைல்கல் சாதனையை கொண்டாடும் விதமாக தன் வாடிக்கையாளர்களுக்குக் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கியுள்ளது. எச்டிஎஃப்சி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி லீ 2 மற்றும் லீ மேக்ஸ் 2 கருவிகளை வாங்கும் போது 10 சதவீதம் கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகின்றது.

லீ 2

லீ 2 கருவிகளை வாங்குவோருக்கு இலவச சிடிஎல்ஏ ஹெட்போன்களும் லீ மேக்ஸ்2 கருவிகளை வாங்குவோருக்கு இலவச சிடிஎல்ஏ ஹெட்போன்களுடன், ஸ்கிரீன் கார்டு, கவர் மற்றும் ரிங் பிராக்கெட் போன்றவை வழங்கப்படுகின்றது.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட் தளத்திலும் லீஇகோ கருவிகளுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை கொண்டு லீ2, லீ மேக்ஸ்2 மற்றும் லீ 1எஸ் இகோ கருவிகளை வாங்கும் போது 10 சதவீத கேஷ்பேக் வழங்கப்படுகின்றது.

லீ மேக்ஸ்2

லீ2 மற்றும் லீ மேக்ஸ்2 கருவிகளை வாங்கும் போது பழைய கருவிகளை எக்ஸ்சேன்ஜ் செய்து ரூ.3000 வரை கூடுதல் சலுகை பெற முடியும். மேலும் லீ 1எஸ் இகோ கருவியை வாங்குவோருக்குக் கூடுதல் சலுகையாக ரூ.500 தள்ளுபடி செய்யப்படுகின்றது.

லீஇகோ

லீஇகோவின் இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்போன் கருவிகள் ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றது. தற்சமயம் வரை லீஇகோ நிறுவனம் இரண்டே மாதங்களில் சுமார் 200,000 லீ 2 கருவிகளை விற்பனை செய்துள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Le Million Joy offers receive astonishing user response
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்