நேரடி விற்பனைக்கு வரும் சூப்பர்போன்.!!

Written By:

இந்திய வாடிக்கையாளர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கும் புது வரவு சூப்பர் போன் கருவி தான் லீ இகோ நிறுவனத்தின் லீ2. அட்டகாசமான சிறப்பம்சம், அழகிய வடிவமைப்பு மற்றும் குறைந்த விலை போன்றவை இந்தக் கருவியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கூற முடியும்.

லீ 2 சூப்பர்போன்களின் விற்பனை பிளாஷ் முறையில் நடத்தப்பட்டது, இதுவரை நடைபெற்ற மூன்று பிளாஷ் விற்பனையிலும் லீ 2 கருவிகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு பெற்றதால் லீ இகோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தியை அறிவித்துள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

நேரடி விற்பனை

அதன் படி வாடிக்கையாளர்கள் லீ2 சூப்பர்போன் கருவிகளை லீ மால் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் நேரடி விற்பனை (ஓபன் சேல்) முறையில் வாங்க முடியும். நேரடியாக இணையதளம் சென்று முன்பதிவு செய்தால் கருவி உங்கள் வீடி தேடி வரும்.

திரை

லீ 2 கருவியானது 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, மற்றும் இன்-செல் ஸ்கிரீன் கொண்டுள்ளது. இந்த அம்சம் வழக்கமாக விலை உயர்ந்த கருவிகளில் மட்டும் வழங்கப்படுவதாகும்.

பிராசஸர்

லீ2 சூப்பர் போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 பிராசஸர், 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்டிருக்கின்றது. இதோடு புதிய ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் சார்ந்த EUI 5.8 யூஸர் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமராவை பொருத்த வரை லீ2 கருவியில் 16 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதோடு PDAF மற்றும் CLosed Loop போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.

இசை

இதோடு லீ2 சூப்பர்போன் உலகின் முதல் CDLA தரம் கொண்ட கருவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தொழில்நுட்பம் மூலம் தொந்தரவில்லா இசையை அனுபவிக்க முடியும்.

விலை

லீ இகோ லீ2 சூப்பர் போன் கருவிகள் இந்தியாவில் ரூ.11,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இதோடு பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சலுகை

லீ2 சூப்பர் போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,990 மதிப்புடைய ஒரு ஆண்டு லீ இகோ சந்தா வழங்கப்படுகின்றது. இதன் மூலம் 3000 க்கு அதிகமான மணி நேர நிகழ்ச்சிகள் மற்றும் 150க்கும் அதிகமான தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
LeEco Le 2 Superphone now available on open sale Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்