பிளிப்கார்ட் பிளாஷ் விற்பனை அதிரடி கிளப்பிய புதிய நிறுவனம்!!

Written By:

லீ இகோ நிறுவனத்தின் லீ 2 சூப்பர் போன் கருவிக்கான மூன்றாவது பிளாஷ் விற்பனை நேற்று நடைபெற்றது. பிளாஷ் விற்பனையைத் தொடர்ந்து லீ 2 கருவிகளுக்கான பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களின் மதிப்பீடு 4.2 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இது மற்ற கருவிகளை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிளிப்கார்ட் பிளாஷ் விற்பனை அதிரடி கிளப்பிய புதிய நிறுவனம்!!

வெற்றிகரமான பிளாஷ் விற்பனையைத் தொடர்ந்து லீ 1 கருவிக்கான அடுத்தப் பிளாஷ் விற்பனை ஜூலை 14 ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியினை முந்தைய கருவிகளைப் போன்றே லீ மால் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும். லீ இகோ நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை சூப்பர்போன்கள் வித்தியாசமான வடிவமைபர்பு, குறைந்த விலை மற்றும் கவர்ந்திழுக்கும் அம்சங்களால் அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சாதனை

'கடந்த மூன்று பிளாஷ் விற்பனைகளிலும் லீ இகோ இரண்டாம் தலைமுறை சூப்பர்போன்கள் முந்தை பிளாஷ் விற்பனை சாதனைகளை முறியடித்திருக்கின்றது' என அந்நிறுவனத்தின் அதுல் ஜெயின் தெரிவித்துள்ளார்.

அங்கீகாரம்

'பிளாஷ் விற்பனையில் லீ 2 கருவி பெற்றிருக்கும் வரவேற்பு வாடிக்கையாளர்கள் இந்தக் கருவியினை விரும்புவதற்கான அங்கீகாரமாக எடுத்துக் கொள்ள முடிகின்றது, தொடர்ந்து வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் கருவிகளை வழங்குவோம்' என்றும் அதுல் ஜெயின் தெரிவித்துள்ளார்.

அம்சம்

லீ 2 கருவியில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி திரை, பெரிய கருவிகளில் மட்டும் வழங்கப்படும் இன்-செல் டிஸ்ப்ளே திரை வழங்கப்பட்டுள்ளது. லீ 2 கருவியில் யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் அதிவேகமாகச் சார்ஜ் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு

லீ 2 கருவியில் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 பிராசஸர் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி, 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

சேவை

லீ 2 மற்றும் லீ மேக்ஸ்2 கருவிகளை வாங்கும் பயனர்களுக்குச் சூப்பர்டெயின்மென்ட் திட்டத்தின் கீழ் 2000க்கும் அதிகமான திரைப்படங்களைப் பார்க்கும் வசதி, 1.9 மில்லியன் பாடல்கள், 3000 க்கு அதிகமான மணி நேர நிகழ்ச்சிகள் மற்றும் 150க்கும் அதிகமான தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வசதி வழங்கப்படுகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
LeEco Le 2 rated with 4.2 stars after its successful third Flash Sale on Flipkart Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்