லீ இகோ லீ2 சூப்பர்போன் பிளாஷ் விற்பனை.!!

Written By:

லீ இகோ நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை சூப்பர்போன் கருவிகளை இந்தியாவில் வெளியிட்டது. லீ 1 மற்றும் லீ மேக்ஸ் 2 கருவிகள் இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. 

லீ 2 கருவிகளைப் பிளிப்கார்ட் தளத்தின் பிளாஷ் விற்பனை மூலம் வாங்குவோர் வோடாஃபோன் சேவையில் டபுள் டேட்டா சலுகை பெற முடியும். இரண்டாம் தலைமுறை கருவிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து சிறப்பான கருவிகளை இந்தியாவில் வெளியிடுவோம் என லி இகோ நிறுவனத்தின் அதுல் ஜெயின் தெரிவித்துள்ளார்.

முன்பதிவு செய்ய இணைய முகவரி

லீ மால்
http://in.lemall.com/in/campaigns/Le20620.html?cps_id=SMFB_le2_20160617_FB

பிளிப்கார்ட்

http://www.flipkart.com/leeco-le-2/p/itmejeucxaxmnk8k?pid=MOBEJEUCS2Z4N2E2

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

டிஸ்ப்ளே

லி இகோவின் லீ 2 கருவியின் வடிவமைப்பு மற்றும் அழகான தோற்றம் பார்ப்பவர்களைக் கவரும் வகையில் இருக்கின்றது. இந்தக் கருவியில் 5.5 இன்ச் FHD டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

ஃபில்டர்

லீ 2 கருவியின் நீல நிற ஃபில்டர் பயனர்களின் கண்களுக்குத் தீங்கு விளைவிக்காது. மேலும் இதன் இன்-செல் டிஸ்ப்ளே கருவியை மெலிதாகவும், எடை குறைவாகவும் இருக்கக் காரணமாக இருக்கின்றது. இதனால் குறைந்த விலையிலும் விலை உயர்ந்த கருவி போல் தோற்றமளிக்கின்றது.

பிராசஸர்

லீ 2 கருவியில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 பிராசஸர், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதோடு ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ சார்ந்த EUI 5.8 இயங்குதளம் கொண்டிருக்கின்றது.

பேட்டரி

லீ 2 கருவியானது 3000 எம்ஏஎசட் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. ஒரு முறை சார்ஜ் செய்து அதிகளவு பயன்பாடுகளிலும் இந்தக் கருவியை நாள் முழுக்கப் பயன்படுத்த முடியும்.

கேமரா

லீ 2 கருவியில் 16 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் கருவியை வாங்கிய பயனர்கள் தற்சமயம் வரை இந்தக் கருவிக்கு நல்ல மதிப்பெண் வழங்கி வருகின்றனர்.

லீ மேக்ஸ் 2

லீ மேக்ஸ் 2 கருவியில் 5.7 இன்ச் டிஸ்ப்ளே 2560*1440 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. இதோடு 21 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

பிராசஸர்

லீ மேக்ஸ் 2 கருவியைப் பொருத்த வரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர், 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ரோம் வழங்கப்பட்டுள்ளது. தரமான அம்சங்களோடு யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
LeEco Le 2: Less than 24 hours left to register for the coming flash sale Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்