மெட்டல்-கிளாட் லீ 1எஸ் : இந்தியாவில் புதிய ட்ரென்ட் இது தான்.!!

Written by: Super

முற்றிலும் மெட்டல் வடிவமைப்பு கொண்ட கருவிகள் விலை உயர்ந்த ரகங்களில் மட்டுமே வழங்கப்படுவது தற்சமயம் வரை வாடிக்கையாக இருந்து வருகின்றது. ஆனால் இந்த நிலையில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளது. பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களிலும் மெட்டல் சேசிஸ் வழங்கப்படுகின்றது.

லீஈகோ அந்த வகையில் முதல் இடத்தை பிடித்திருக்கின்றது எனலாம். அந்நிறுவனத்தின் லீ 1எஸ் கருவி இந்தியாவில் ரூ.10,999க்கது வெளியிடப்பட்டுள்ளது. இந்த கருவி முற்றிலும் மெட்டல் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மெட்டல் பயன்பாடு

ஸ்மார்ட்போன்களில் மெட்டல் பயன்படுத்துவது கருவியின் அழகை அதிகமாக வெளிக்காட்டும். ஆனால் அதிக பயன்பாடுகளின் போது கருவி சற்றே வெப்பமாக இருப்பதை கைகளில் உணர முடியும். பொதுவாகவே மெட்டல் கருவிகள் மிக விரைவாக சூடாவதை போன்றே மிக விரைவில் குளிர்ந்தும் விடும்.

காம்பாக்ட் அளவு

கருவிகள் சிறியதாக வடிவமைக்கப்பட்டிருந்தால் போதுமான காற்றோட்டம் கிடைக்காமல் சிறிது நேரத்தில் கருவி சூடாகி விடும். ஆனால் இந்த கருவியில் பேட்டரி பிராசஸர் அருகில் பொருத்தப்பட்டிருப்பதால் சரியான காற்றோட்டம் கிடைக்கின்றது.

கேமிங்

அதிக கேம்களை விளையாடுவதால் அதிகப்படியான கிராஃபிக்ஸ் பயன்படுத்தப்படும். இதனால் மதர் போர்டு அதிகப்படியான பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படுகின்றது. இதனால் கருவி அதிகமாக சூடாகின்றது.

கேஸ்

கருவி அதிகமாக சூடாகும் பட்சத்தில் கருவியில் போடப்பட்டிருக்கும் கேசை கழற்றி விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது கருவியின் சூடானது உடனடியாக குறைந்து விடும்.

விற்பனை

சராசரியாக 30 நாட்களில் சுமார் 200,000 கருவிகளை விற்பனை செய்து லீஈகோ நிறுவனம் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சந்தையை திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது என்றே கூற வேண்டும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Metal-clad LeEco Le 1S sets a new trend in budget smartphone segment in India
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்