சிறப்பு சலுகைகளை வழங்கும் லீஇகோ விற்பனை திருவிழா.!!

Written By:

லீஇகோ நிறுவனத்தின் சிறப்பு விற்பனை திருவிழா EPIC 919 சூப்பர்ஃபன்ஸ் என்ற பெயரில் துவங்கிவிட்டது. EPIC 919 சூப்பர்ஃபேன்ஸ் ஆன்லைன் விற்பனை திருவிழா மூலம் பயனர்களுக்கு அதிகளவு சலுகைகளை லீஇகோ வழங்கி இருக்கின்றது. அதன் படி இந்திய வாடிக்கையாளர்களுக்கு இதுவரை இல்லாதளவு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் துவங்கும் இந்தச் சிறப்பு விற்பனை திருவிழா லீமால்.காம் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை திருவிழாவில் லீஇகோ சூப்பர்போன் மற்றும் சூப்பர்டிவி கருவிகளுக்குச் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

முதல் முறை

24 மணி நேரம் நடைபெறும் ஆன்லைன் விற்பனை திருவிழாவினை பலருக்கு எடுத்துச் செல்வதன் மூலம் பயனர்களின் வாழ்க்கையை மாற்றுவதோடு, தொழில்நுட்ப நிறுவனம் ஆன்லைனில் இத்தகைய திருவிழாவை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

லீ2 சூப்பர்போன்

லீமால்.காம் தளத்தில் லீ2 சூப்பர்போன் வாங்குவோருக்கு ரூ.3000 மதிப்புள்ள சலுகைச் சீட்டு, எச்டிஎப்சி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீத கேஷ்பேக் அல்லது 6 மாதங்களுக்கு வட்டியில்லா தவணை முறை, மேக்மைட்ரிப் சார்பில் ரூ.2000 மதிப்புள்ள சலுகை சீட்டு மற்றும் ரூ.4900 மதிப்புள்ள ஒரு ஆண்டு லீஇகோ சந்தா இலவசமாக வழங்கப்படுகின்றது. பிளிப்கார்ட் பயனர்கள் கூடுதலாக ரூ.3000 வரை எக்ஸ்சேன்ஜ் சலுகையும், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீத தள்ளுபடி, மேக்மைட்ரிப் சார்பில் ரூ.2000 மதிப்புள்ள சலுகை சீட்டு மற்றும் ரூ.4900 மதிப்புள்ள ஒரு ஆண்டு லீஇகோ சந்தா இலவசமாக வழங்கப்படுகின்றது.

லீ மேக்ஸ் 2

லீஇகோவின் லீமால்.காம் தளத்தில் லீ மேக்ஸ்2 சூப்பர்போன் கருவியை வாங்குபவர்களுக்கு ரூ.3000 மதிப்புள்ள சலுகைச் சீட்டு, எச்டிஎப்சி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீத கேஷ்பேக் அல்லது 6 மாதங்களுக்கு வட்டியில்லா தவணை முறை, ரூ.1990 மதிப்புடைய சிடிஎல்ஏ இயர்போன்கள், மேக்மைட்ரிப் சார்பில் ரூ.6000 மதிப்புள்ள சலுகை சீட்டு மற்றும் ரூ.4900 மதிப்புள்ள ஒரு ஆண்டு லீஇகோ சந்தா இலவசமாக வழங்கப்படுகின்றது. பிளிப்கார்ட் பயனர்கள் கூடுதலாக ரூ.3000 வரை எக்ஸ்சேன்ஜ் சலுகையும், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீத தள்ளுபடி, மேக்மைட்ரிப் சார்பில் ரூ.6000 மதிப்புள்ள சலுகை சீட்டு, ரூ.1990 மதிப்புடைய சிடிஎல்ஏ இயர்போன்கள் மற்றும் ரூ.4900 மதிப்புள்ள ஒரு ஆண்டு லீஇகோ சந்தா இலவசமாக வழங்கப்படுகின்றது.

லீ 1எஸ் இகோ

பிளிப்கார்ட் பயனர்கள் லீ 1எஸ் இகோ கருவியை வாங்கும் போது ரூ.1000 வரை கூடுதல் தள்ளுபடி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீத கூடுதல் தள்ளுபடி, ரூ.1300 மதிப்புள்ள இலவச இயர்போன் மற்றும் ரூ.1000 மதிப்புள்ள மேக்மைட்ரிப் சலுகைச் சீட்டு போன்றவை வழங்கப்படுகின்றன.

மேக்மைட்ரிப் சலுகைச் சீட்டுகளை பயனர்களுக்கு வழங்கப்பட்ட ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

சூப்பர் டிவி

சூப்பர்3 எக்ஸ்55 தொலைக்காட்சியினை பயனர்கள் ஆறு மாத தவணைக்கு எவ்வித வட்டியும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இந்தச் சலுகை லீமால்.காம் மற்றும் பிளிப்கார்ட் பயனர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. லீமால்.காம் தளத்தில் வாங்குபவர்களுக்கு ரூ.19,999 மதிப்புள்ள 2.1 சேனல் சவுண்ட் பார் மற்றும் வயர்லெஸ் சப்ஊஃபர் முன்பதிவின் போது வழங்கப்படுகின்றது. லீமால்.காம் தளத்தில் வாங்கும் போது பயனர்களுக்குக் கூடுதலாக ரூ.3000 வரை கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுகின்றது. பிளிப்கார்ட் பயனர்கள் ரூ.25000 வரை எக்ஸ்சேன்ஜ் சலுகை பெற முடியும்.

சூப்பர் டிவி சலுகைகள்

லீமால்.காம் மற்றும் பிளிப்கார்ட் பயனர்களுக்கு சூப்பர்3 மேக்ஸ்65 அல்லது சூப்பர்3 எக்ஸ்65 தொலைக்காட்சிகளை வாங்கும் போது வட்டியில்லா தவணை வழங்கப்படுகின்றது. கூடுதலாக பிளிப்கார்ட் பயனர்களுக்கு ரூ.25000 வரை எக்ஸ்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகின்றது. இத்துடன் பயனர்களுக்கு ரூ.9800 மதிப்புள்ள இரண்டு ஆண்டு லீஇகோ சந்தா இலவசமாக வழங்கப்படுகின்றது.

கருவிகள்

சூப்பர் டிவி மற்றும் சூப்பர் போன் கருவிகளோடு இல்லாமல் லீஇகோ நிறுவனத்தின் மற்ற கருவிகளுக்கும் பிரத்தியேக சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன் படி

1. ப்ளூடூத் ஹெட்போன், ப்ளூடூத் ஸ்பீக்கர் மற்றும் சிடிஎல்ஏ டைப் சி இயர்போன் கருவிகளுக்கு ரூ.500 வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது.
2. ரிவர்ஸ் இன்-இயர் ஹெட்போன்களுக்கு ரூ.250 வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

3. ஸ்மார்ட்போன் கவர் மற்றும் கேஸ்களுக்கு ரூ.200 வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

4. ரிங் பிராக்கெட்களுக்கு ரூ.100 வரை தள்ளுபடி வழபங்கப்படுகின்றது.

 

லீஇகோ

லீஇகோ நிறுவனத்தின் இதுவரை இல்லா சலுகைகளை தவற விடாதீர்கள். பிடித்த கருவிகளை அதிகப்படியான சலுகைகளுடன் வாங்கிச் செல்லுங்கள்..

காணொளி

லீஇகோ விற்பனை திருவிழா சார்ந்த காணொளி.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்



English summary
Log onto LeEco EPIC 919 SuperFan Festival for Amazing Discounts and Deals on Superphones and SuperTV
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்