மேக் இன் இந்தியா: இந்தியாவில் தயாராகும் சர்வதேச ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்

By Siva
|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை உலக அளவில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. 120 கோடி ஜனத்தொகை உள்ள நாடு என்பதால் உலகின் முன்னணி நிறுவனங்கள் இந்திய சந்தையில் காலூன்று பெரும் முயற்சிகள் செய்து வருகின்றன.

மேக் இன் இந்தியா: இந்தியாவில் தயாராகும் சர்வதேச ஸ்மார்ட்போன் நிறுவனங்க

இவற்றில் ஒருசில நிறுவனங்கள் இந்தியாவிலேயே தங்கள் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய தொழிற்சாலைகளையும் அமைத்துள்ளன. அந்த வகையில் லேட்டஸ்ட் ஆக இந்தியாவில் தனது உற்பத்தியை துவங்கியுள்ள சீன நிறுவனம்தான் லியோகோ (LeEco)

திடீரென நிறுத்தப்பட்ட கூகுள் திட்டம், என்ன காரணம்.??

இந்தியாவில் உள்ள சர்வதேச நிறுவனங்கள் குறித்து தற்போது பார்ப்போம்,.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சாம்சங்:

சாம்சங்:

கடந்த 2006ஆம் ஆண்டே இந்தியாவில் தனது உற்பத்தியை தொடங்குவதற்காக நொய்டாவில் தொழிற்சாலையை அமைத்துள்ள சாம்சங் நிறுவனத்தின் முக்கிய சந்தை இந்தியாதான். இந்த நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் இந்தியர்களை வெகுவாக கவரந்துள்ளதால் மேலும் ஒரு தொழிற்சாலையை இந்தியாவில் தொடங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்போன்:

மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்போன்:

இந்தியாவை சேர்ந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனத்திற்கு அடுத்த இடத்தில் உள்ளது. தெலுங்கான, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் தனது உற்பத்தியை தொடங்கியுள்ள இந்நிறுவனம் மேலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதேபோல் கார்போன் நொய்டா மற்றும் பெங்களூரில் தொழிற்சாலை அமைத்து சுமார் 200 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

சியாமி மற்றும் ஜியோனி:

சியாமி மற்றும் ஜியோனி:

சீனாவின் முன்னணி நிறுவனமான சியாமி நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து தங்கள் உற்பத்தியை இந்த வருடம் முதல் இந்தியாவில் துவக்கியுள்ளன. ஆந்திராவில் உள்ள ஸ்ரீசிட்டி இந்நிறுவனங்கள் காலூன்றிய இடம் ஆகும். இந்நிறுவனங்களின் ரெட்மி மாடல்கள் இந்தியர்களின் பெரும் வரவேற்பை பெற்ற மாடல்கள் ஆகும்.

எல்ஜி:

எல்ஜி:

இந்நிறுவனமும் இப்போதுதான் இந்தியாவில் தங்கள் உற்பத்தியை தொடங்க ஆரம்பித்துள்ளன. எல்ஜி கே7 மற்றும் எல்ஜிகே10 ஆகிய மாடல்கள் இந்தியாவில் தயாரானவை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற நிறுவனங்கள்:

மற்ற நிறுவனங்கள்:

மேலும் இந்தியாவில் விவோ, ஓப்போ, லாவா என மற்ற நிறுவனங்களும் இந்தியாவில் உற்பத்தியை தொடங்கி இந்தியர்களின் மனதில் இடம்பிடிக்க முயற்சிகள் செய்து வருகின்றன. லாவா நிறுவனம் இந்தியாவில் ரூ.1200 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேக் இன் இந்தியாவின் நன்மைகள்

மேக் இன் இந்தியாவின் நன்மைகள்

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் க்னவு திட்டங்களில் ஒன்று 'மேக் இன் இந்தியா. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முதலீடு செய்தால், இந்திய பொருளாதாரம் செழிப்படைவதோடு, இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

Best Mobiles in India

English summary
Several Smartphone brands have been really pushing hard in India. There are nearly 25 brands which locally manufacture their devices and there are many big players in that list.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X