விரைவில் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடல் எப்படி இருக்கும்?

By Siva
|

தென்கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனம் வெளியிடு ஒவ்வொரு வகை மாடல் போன்களும் வாடிக்கையாளர்கள் இடையே பெரும் மதிப்பையும் வரவேற்பையும் பெற்று வரும் நிலையில் கேலக்ஸி நோட் 7 உச்சகட்ட வரவேற்பை பெற்றது.

விரைவில் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடல் எப்படி இருக்கும்?

6ஜிபி ரேம், டூயல் எட்ஜ் டிஸ்ப்ளே ஆகிய அம்சங்களுடன் வந்த கேலக்ஸி நோட் 7 போலவே கேலக்ஸி நோட் 8 மாடலிலும் 6ஜிபி ரேம், டூயல் எட்ஜ் டிஸ்ப்ளே அம்சங்கள் இருக்கும் என்று செய்திகள் பரவி வருகிறது. இந்த புதிய மாடலின் வரவை ஸ்மார்ட்போன் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளதால் செப்டம்பர் 28ஆம் தேதியை நோக்கி அனைவரின் கவனமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1.5 கோடி பேர் டவுன்லோடு செய்த மைஜியோ ஆப்.!

இந்நிலையில் செப்டம்பர் 28ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி நோட் 8 வகை மாடல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலில் என்னென்ன புதுப்புது அம்சங்கள் இருக்கலாம் என்று வெளியான வதந்திகளை தற்போது பார்ப்போம்,

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ப்ளாட் டிஸ்ப்ளே இருக்காது:

ப்ளாட் டிஸ்ப்ளே இருக்காது:

இதுவரை சாம்சங் நிறுவனம் வெளியிட்டு வந்த மாடல்கள் பெரும்பாலான மாடல்களில் பிளாட் பேனல் இருந்த நிலையில் இனி வரப்போகும் கேலக்ஸி நோட் 8 மாடலில் கண்டிப்பாக வளைந்த அதாவது கர்வ் டிஸ்ப்ளே பேனல்தான் இருக்கும் என வதந்திகள் பரவி வருகிறது. இந்த தகவலை கடந்த சில நாட்களுக்கு முன்பு சாம்சங் ஊழியர் ஒருவர் தெரிவித்திருந்தார். மேலும் கொரியாவில் இருந்து வெளிவரும் கொரியா ஹெரால்ட் என்ற ஊடகமும் இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு வளைவு டிஸ்ப்ளே இருக்குமா?

இரண்டு வளைவு டிஸ்ப்ளே இருக்குமா?

ஏற்கனவே சாம்சங் நிறுவனத்தில் எஸ் சீரீஸ் மாடல்களில் இரண்டு வகையான பேனல் டிஸ்ப்ளே இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. ஒன்று பிளாட் டிஸ்ப்ளே மற்றொன்று பெரிய மற்றும் எட்ஜ் டிஸ்ப்ளே. ஆனால் இனி வரப்போகும் மாடலில் டூயல் எட்ஜ் டிஸ்ப்ளே இருக்கும் என உறுதியாக எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டிசைனில் மாற்றம் இருக்குமா?

டிசைனில் மாற்றம் இருக்குமா?

ஆப்பிள் நிறுவனம் அடுத்த வருடம் தனது டிசைனை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்துள்ள் நிலையில் சாம்சங் நிறுவனமும் அந்நிறுவனத்தை பின்பற்றி டிசைனை மாற்ற முடிவு செய்துள்ளது. இதுவரை இல்லாத புதிய அட்ராக்சனான டிசைனை உருவாக்கி ஆப்பிள் நிறுவனத்திற்கு கடும் போட்டியை கொடுக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இனிமேல் 3.5mm ஹெட்போக் கிடையாது

இனிமேல் 3.5mm ஹெட்போக் கிடையாது

சாம்சங் நிறுவனம் எப்போதுமே ஆப்பிள் நிறுவனத்தின் மாற்றங்களை தனது மாடல்களிலும் பின்பற்றி வருவது போல கேலக்ஸி நோட் 8 மாடலில் 3.5mm ஹெட்போக் கிடையாது என்றே கருதப்படுகிறது. அதற்கு பதிலாக USB Type-C port வகை ஆடியோ இருக்கும் என்றும் இது வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ட்ரீம் மற்றும் ட்ரீம் 2 கோட்நேமில் வெளிவரும்

ட்ரீம் மற்றும் ட்ரீம் 2 கோட்நேமில் வெளிவரும்

கேலக்ஸி நோட் 8 மாடல் ட்ரீம் மற்றும் ட்ரீம் 2 கோட்நேமில் தான் வெளிவரும் என்ற ஆச்சரியத்தக்க தகவல்கள் வெளிவந்துள்ளதால் இதன் வாடிக்கையாளர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

பிராஸசர் எப்படி இருக்கும்?

பிராஸசர் எப்படி இருக்கும்?

மிகவும் முக்கியமான அம்சமான பிராஸசர் எப்படி இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும் நிலையில் சாம்சங் நிறுவனத்திற்கு சொந்தமான எக்ஸினோஸ் 8895 பிராஸசர் இருக்கும் என்றும் இதன் பவர் 3.0GHz இருப்பதால் முந்தைய மாடல்களை விட மிகவும் வேகமாக செயல்படும் என்றும் தெரிகிறது

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

4K டிஸ்ப்ளே

4K டிஸ்ப்ளே

mydrivers.com என்ற இணையதளத்தின் செய்தியின்படி சாம்சங் நிறுவனத்தின் புதிய மாடலான கேலக்ஸி நோட் 8 மாடலில் 4K டிஸ்ப்ளே வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 'புரொஜக்ட் ட்ரீம்' என்ற பெயருடன் உள்ள டிஸ்ப்ளே அடுத்த வாரிசு இளைஞர்களுக்கான ஒரு வரப்பிரசாதம் என்று கூறினால் அது மிகையாகாது.

அதுசரி ரேம் எவ்வளவு இருக்குது

அதுசரி ரேம் எவ்வளவு இருக்குது

சீன நிறுவனங்களின் பல ஸ்மார்ட்போன்கள் தற்போது 6ஜிபி ரேம் கொண்ட போன்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. கேலக்ஸி நோட் 7 மாடலிலும் 6ஜிபி ரேம்தான் உள்ளது. எனவே கேலக்ஸி நோட் 8 மாடலிலும் கண்டிப்பாக 6ஜிபி ரேம்தான் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Samsung is at the receiving end for the all the bad stuff for nearly a month due to unexpected explosions of Galaxy Note 7. The South Korean giant quickly recalled the smartphone, however, that didn't help the company to deflect heavy loss.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X