ஒரு காலத்தில் வீட்டுக்குள்ளே முடக்கப்பட்டிருந்த பெண்கள், இன்று அனைத்து துறைகளிலும் சிறந்துவிளங்குகின்றனர். அதிலும் IT துறையில் ஆண்களைவிட பெண்களுக்கே 'மதிப்பு' அதிகமென்கின்றனர்.
ஒரு அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில், IT துறையில் பணியாற்றுபவர்களில் 57 விழுக்காட்டினர் பெண்களே என்கிறது அந்த ஆய்வு.
இத்துறையில், பிசினஸ்ஸில் மட்டுமல்லாது தொழில்நுட்பரீதியாகவும் சிறந்து விளங்குகின்றனர் என்பதே தனிச்சிறப்பு.
நாங்கள் இங்கே, IT துறையில் அதிகம் சம்பளம் வாங்கும் அல்லது சம்பாதிக்கும் 5 பெண்களை வரிசைப்படுத்தியுள்ளோம். தொகுப்பு கீழே!
ஜூலி லார்சன் கிரீன்:
IT துறையில் தொழில்நுட்பரீதியில் சிறந்துவிளங்கும் இவர் பல வருடங்களாகவே மைக்ரோசாப்ட் நிறுவனத்தில்தான் பணியாற்றிவருகிறார்.
இவர் 2 டிகிரிகளை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷுவல் C++ன் ப்ரோக்ராம் மேனேஜராக வாழ்க்கையை தொடங்கியவர், இன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளான, இன்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் மற்றும் ஆபீஸ் மென்பொருள்களின் தலைமை வடிவமைப்பாளராக உள்ளார்!











































