அதிக அம்சங்கள் ஆனால் விலை குறைவு : லீ இகோ புதிய யுக்தி.??

Written By:

ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பில் புதிய ட்ரென்ட் உருவாக்குவதில் லீ இகோ நிறுவனம் அதிகக் கவனம் செலுத்தி வருகின்றது. இதனாலேயே இந்தியாவில் லீ இகோ கருவிகளை விரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய நிறுவனமான லீ இகோ சமீபத்தில் லீ2 மற்றும் லீ மேக்ஸ்2 என இரு கருவிகளை அறிமுகம் செய்தது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சூப்பர் போன்

லீ மேக்ஸ் 2 கருவியானது பாக்கெட்-சைஸ் சூப்பர் போன் என அழைக்கப்படுகின்றது, அதாவது கச்சிதமான சூப்பர்போன். இந்தக் கருவி மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ளது. இந்தக் கருவியின் விலைக்குச் சந்தையில் கிடைக்கும் மற்ற கருவிகளில் பிளாஸ்டிக் அல்லது பாலிகார்பனைட் வடிவமைப்பு தான் வழங்கப்படுகின்றது.

டிஸ்ப்ளே

இதோடு இந்தக் கருவியில் இன்-செல் டிஸ்ப்ளே திரை வழங்கப்பட்டுள்ளது. இந்த வகைத் திரை விலை உயடர்ந்த கருவிகளில் அதிகம் வழங்கப்படும். இன்-செல் திரை கருவியின் அளவினை மெலிதாக வைத்துக் கொள்வதோடு எடையும் குறைவாகவே இருக்கின்றது. லீ 2 கருவியானது ஐபோன் 6எஸ் பிளஸ் கருவியை விட எடை குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிராசஸர்

லீ மேக்ஸ் 2 கருவியானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர் கொண்டு இயங்குகின்றது. இதோடு மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கருவியை அழகாகக் காட்டுகின்றது.

வடிவமைப்பு

பொதுவாக மெட்டல் யுனிபாடி வடிவமைப்புக் கொண்ட கருவிகள் எளிதில் அதிகச் சூடாகும் என்ற கருத்து நிலவுகின்றது. ஆனால் இந்த வகை வடிவமைப்புக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் போனில் ஏற்படும் சூட்டை விரைவில் தனிக்கக்கூடியது.

அழகு

பிளாஸ்டிக் மற்றும் பாலிகார்பனைட் மூலம் வடிவமைக்கப்படும் கருவிகளில் ஏற்படும் வெப்பம் தனிய சற்றே நேரம் ஆகும். மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கருவியின் அழகை வெளிப்படுத்துவதோடு விலை உயர்ந்த கருவி போன்ற தோற்றத்தையும் வழங்கும்.

துணைக்கருவிகள்

கச்சிதமான வடிவமைப்புக் கொண்ட லீ 2 மற்றும் லீ மேக்ஸ்2 கருவிகள் ரோஸ் கோல்டு நிறத்தில் கிடைக்கின்றது. மேலும் அனைத்து வித மின்சாதன கருவிகளோடும் எளிதில் இணைந்து கொள்வது மற்றும் சந்தையில் வித்தியாசமாக அழகாகக் கிடைக்கும் துணைக்கருவிகளோடு பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அம்சங்கள்

லீ 2 கருவியைப் பொருத்த வரை ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் TM 652 பிராசஸர், 16 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 8 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்படுகின்றது. இதோடு 4 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என இரு வித மாடல்களில் கிடைக்கின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Le 2 and Le Max2 with metal body chassis set trend, help define your design statement Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்