என்ன செய்தாலும் வேலை செய்யும் ஐபோன் எஸ்இ.!!

Written By:

ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடு தான் ஐபோன் SE. ஆப்பிள் வரலாற்றில் மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த கருவி இந்தியாவிலும் விற்பனையை துவங்கி விட்டது. வழக்கமாக புதிய ஐபோன் வெளியாகும் போது அதன் தரம் மற்றும் உறுதி திறனை சோதிக்க பல்வித சோதனைகள் நடத்தப்பட்டு அவைகளின் வீடியோ இணையத்தில் வெளியிடப்படும்.

அந்த வகையில் புதிய ஐபோன் கருவியின் தரத்தை சோதனை செய்ய கருவியை நீரில் போட்டு அதனினை ஐஸ் கட்டியாக மாற்றி சுமார் 100 அடி உயரத்தில் இருந்து கீழே போட்டனர். அதன் பின் கருவி வேலை செய்கின்றதா என்பதை வீடியோ மூலம் பதிவு செய்துள்ளனர்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மதிப்பு

இந்த சோதனைக்கு பின் ஐபோன் SE கருவி வேலை செய்ததா இல்லையா என்பதை இறுதி ஸ்லைடரில் இணைக்கப்பட்டிருக்கும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் ஐபோன் SE கருவியில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

திரை

ஐபோன் SE கருவியில் 4 இன்ச் திரை வழங்கப்பட்டுள்ளது. 640*1136 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 3டி டச் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

மென்பொருள்

ஐபோன் SE கருவியானது ஐஓஎஸ் 9 இயங்குதளமும் வித்தியாசமான இண்டர்ஃபேஸ் மிகவும் கவர்ச்சிகரமாகவும் இருப்பதோடு பயன்பாடுகள் எளிமையாக இருக்கின்றன. இதில் மெசேஜ், ஃபேஸ்டைம், புகைப்படம், மியூசிக் மற்றும் மேப்ஸ் போன்ற செயலிகள் பில்ட் இன் ஆப்ஷன்களாக வழங்கப்பட்டுள்ளன.

மெமரி

ஐபோன் SE கருவியானது 16 ஜிபி மற்றும் 64 ஜிபி என இரு வித மெமரிகளில் கிடைக்கின்றது. வழக்கம் போல் மெமரியை நீட்டிக்கும் வசதி இந்த ஐபோனிலும் வழங்கப்படவில்லை.

நிறம்

ஐபோன் SE கருவி ஸ்பேஸ் கிரே, சில்வர், கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு மெட்டாலிக் பினிஷிங்கில் கிடைக்கின்றது.

பேட்டரி

64-பிட் ஏ9 சிப் மற்றும் எம்9 மோஷன் கோ-பிராசஸர் கொண்ட ஐபோன் SE கருவியின் பேட்டரியானது 14 மணி நேர 3ஜி டாக்டைம் மற்றும் ஸ்டான்ட்பை நேரம் 240 மணி நேரம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா

ஐபோன் SE கருவியில் 12எம்பி ஐசைட் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதோடு அதிவேக ஃபோகஸ் செய்ய ஃபோகஸ் பிக்சல் தொழில்நுட்பமும் இமேஜ் சிக்னல் பிராசஸர், மேம்படுத்தப்பட்ட நாய்ஸ் ரிடக்ஷன், லோக்கல் டோன் மேப்பிங் மற்றும் சிறப்பான ஃபேஸ் டிடெக்ஷன் அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.

வீடியோ

ஐபோன் எஸ்இ ஐஸ் கட்டியாக்கப்பட்டு 100 அடி உயரத்தில் இருந்து கீழே போட்ட பின் வேலை செய்கின்றதா, இல்லையா என்பதை வீடியோவில் பாருங்கள்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
iPhone SE Gets Frozen But Still Works Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்