'நம்பிக்கை அது தான் எல்லாம்' ஐபோன் 7

Posted by:

நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கை இல்லை தான் இருந்தாலும் எதிர்பார்ப்புகளை எல்லாம் நம்பி விட முடியாது , ஆனால் நம்புங்க என்கின்றனர் ஐபோன் வல்லுநர்கள். ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கருவி இன்னும் சில வாரங்களில் எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆப்பிள் வல்லுநர்கள் கூறும் சிறப்பம்சங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கருவி ஐபோன் 7 தான் என அதிகமாக நம்பிக்கை வைத்து பிரபல ஆப்பிள் வல்லுநர்கள் அந்த கருவியில் எதிர்பார்க்கும் சிறப்பம்சங்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கேமரா
  

தற்சமயம் வரை வெளியாகி இருக்கும் இணைய குறிப்புகளை வைத்து பார்க்கும் போது 4கே ரெசல்யூஷன் கொண்ட 12 எம்பி ப்ரைமரி கேமரா இருப்பதோடு மேம்படுத்தப்பட்ட செல்பீ கேமரா வழங்கப்படலாம்.

பேட்டரி
  

முந்தைய மாடல்களை விட இந்த கருவியின் பேட்டரி அதிக நேரம் வரை இயங்கும் திறன் வழங்கப்படும்.

வடிவமைப்பு
  

உள்கட்டமைப்பில் சில மாற்றங்களும், வெளிப்புற தோற்றத்தில் அதிகளவு மாற்றங்கள செய்யப்படலாம். இதனால் புதிய கருவி ஐபோன் 6 போன்று இருக்காது என்றே கூறப்படுகின்றது.

நிறம்
  

அனேகமாக ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த கருவி ஸ்பேஸ் க்ரே, சில்வர், கோல்டு என மூன்று நிறங்களில் வெளியாகும் என்கின்றனர் ஆப்பிள் வல்லுநர்கள்.

அளவு
  

வழக்கமான ஆப்பிள் கருவிகளை போன்றே புதிய கருவி 4.7 மற்றும் 5.5 இன்ச் என இரு அளவுகளில் வெளியாகலாம்.

மென்பொருள்
  

ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 9 கடந்த மாதம் வெளியானதை தொடர்ந்து ஐபோன் 7 இல் ஐஓஎஸ்9 கொண்டு தான் இயங்கும் என்றே கூறப்படுகின்றது.

செயல்திறன்
  

வழக்கம் போல ஆப்பிள் கருவி வேகமாக இருப்பதோடு இந்த கருவியில் டச் ஐடி சென்சார் 30 சதவீதம் வரை வேகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சார்ஜிங்
  

ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் வழங்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

ரேம்
  

புதிய ஐபோனில் 2ஜிபி வரை ரேம் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்கிரீன்
  

புதிய கருவி முந்தைய ஐபோன் கருவியை விட தட்டையாக இருக்கும் என்றும் 4.7 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Check out here iPhone 7 rumor round up Specs, features and everything you need to know. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

Social Counting