ஐ போன் 6 முழு சிறப்பம்சங்கள் வெளியாகாமல் இணையத்தில் கசிந்துள்ளது, சிறப்பம்சங்களை பார்ப்போமா

By Meganathan
|

இன்று இரவு நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் அதிகார்ப்பூர்வமாக வெளியாக இருக்கும் ஐ போன் 6 மாடலின் முன்பதிவை இப்போதே கொடங்கியது அமோசு என்ற ஆடம்பர நகை வடிவமைப்பு நிறுவனம். ஆமாங்க ஐ போன் 6, 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட தகடில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐ போன் 6 வெளியாவதற்கு முன்னதாகவே ஐ போன் 6 பற்றிய முழு சிறப்பம்சங்களும் இணையத்தில் கசிந்துள்ளது.

ஐ போன் 6 முழு சிறப்பம்சங்கள் வெளியாகாமல் இணையத்தில் கசிந்தது

இதற்கு முன் வெளியான ஐ போன்களை காட்டிலும் இது மிகவும் சிறந்தது என்றும் இதில் ஷேட்டர் ப்ரூப் ஸ்கிரீன் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. ஐ போன் 6 4.7 மற்றும் 5.5 இன்ச் என இரு வித டிஸ்ப்ளேக்களில் கிடைக்கும். கோல்டு, சில்வர் மற்றும் வெள்ளை என மூன்று வித நிறங்களில் கிடைப்பதோடு சப்பையர் ஸ்கிரீன், வாட்டர் ஃப்ரூப் மற்றும் ஸ்கராட்ச் ரெசிஸ்டன்ட் டிஸ்ப்ளேவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐ போன் 6 இன் இரு மாடல்களிலும் 4ஜி சப்போர்ட் மற்றும் நானோ சிம் பொருத்தும் வசதியும் இருக்கும். 4.70 இன்ச் மற்றும் 5.5 இன்ச் என இரண்டு விதங்களிலும் வெளியாகும் இந்த புதிய ஐ போன் 6 சப்பையர் க்ரிஸ்டல் கிளாஸ் மற்றும் வாட்டர் ப்ரூஃப் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ப்ராசஸரை பொருத்த வரை ஆப்பிள் ஏ8 டூயல் கோர் ப்ராசஸர், 2 ஜிபி ராம் மற்றும் ஐ ஓஎஸ் 8 மூலம் இயங்கும்.

மைக்ரோ எஸ்டி கார்டு பொருத்தும் வசதி இல்லாததால் ஆப்பிள் 16/32/64/128 ஜிபி வகைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றது. ஜிபிஆர்எஸ், எட்ஜ், வைபை 802.11, டூயல் பேன்ட், வைபை ஹாட்ஸ்பாட், ப்ளூடூத், என்எப்சி மற்றும் யுஎஸ்பி வி2.0 இதில் உள்ளது.

கேமராவை பொருத்த வரை ஐ போன் 6, 8 எம்பி ஆட்டோபோக்கஸ் டூயல் எல்ஈடி ப்ளாஷ் கொண்ட ரியர் கேமராவில் டச் போக்கஸ், ஜியோ டேகிங், பேஸ் டிடெக்ஷன், எஹ்டிஆர் பானாரோமா, எஹ்டிஆர் போட்டோ வசதிகள் இதன் சிறப்பம்சங்கள்.

மேலும் ஐ போன் 6 சந்தைகளில் செப்டம்பர் 19 முதல் கிடைக்கும் என்று கூறப்படுவதோடு ஏற்கனவே வெளியான அம்சங்கள் இதோடு பொருந்தவில்லை என்றாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்பு தான் எதையும் உறுதியாக கூற முடியும்.

Best Mobiles in India

Read more about:

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X