ஆப்பிள் நிறுவனத்தின் புதிய iOS 10.2 சாப்ட்வேர்: உங்கள் ஐபோனுக்கு கிடைக்கும் 5 புதிய வசதிகள்

By Siva
|

உலகின் மிக அதிகமான வாடிக்கையாளர்களை தன்வசத்தில் வைத்திருக்கும் ஆப்பிள் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய அவ்வப்போது புதுப்புது சாப்ட்வேர்களை அறிமுகம் செய்து வரும் நிலையில் தற்போது iOS 10.2 சாப்ட்வேரை சோதனை அடிப்படையில் வெளியிட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய iOS 10.2 சாப்ட்வேர்: உங்கள் ஐபோனுக்கு கிடைக

இந்த சாப்ட்வேரை நீங்களும் சோதனை அடிப்படையில் செயல்படுத்த விரும்பினால் டெஸ்ட்டிங் இணையதளத்தில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்

ரூ.178/-க்கு மிக மலிவான 3ஜி திட்டத்தை அறிமுகம் செய்த ஏர்செல்..!

இந்நிலையில் இந்த iOS 10.2 சாப்ட்வேரின் முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்

விதவிதமான இமோஜிஸ்

விதவிதமான இமோஜிஸ்

செல்போன் பயன்படுத்தும் அனைவருமே இமோஜிஸ் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு செல்போனுடன் இமோஜிஸ் ஒன்றி போயுள்ளது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய iOS 10.2 சாப்ட்வேர் புடிய யூனிகோட் 9.0 சப்போர்ட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விதவிதமான பலவகை இமோஜிஸ்-ஐ நீங்கள் பயன்படுத்தலாம். உதாரணமாக நரி, ஆந்தை, ஷார்க், பட்டாம்பூச்சி உள்பட பலவிதமான முகங்கள் உடைய இமோஜிஸ் இதில் உள்ளது.

அதுமட்டுமின்றி தீ அணைப்பவர், மெக்கானிக், வக்கீல் , டாக்டர் , விஞ்ஞானி போன்ற இமோஜிஸ் ஆண், மற்றும் பெண் பாலினத்தில் கிடைக்கும்

புதிய வால்பேப்பர், வீடியோ ஆப்ஸ்களும் கிடைக்கும்

புதிய வால்பேப்பர், வீடியோ ஆப்ஸ்களும் கிடைக்கும்

இந்த புதிய iOS 10.2 சாப்ட்வேர் உதவியால் உங்களுக்கு இதுவரை நீங்கள் பார்த்திராக புதிய மூன்று வால்பேப்பரை அளிக்கின்றது. டிராப்லெட் புளு, டிராப்லெட் சிகப்பு மற்றும் டிராப்லெட் மஞ்சள் ஆகிய மூன்றுவித புரமோஷனல் இமேஜ்கள் உங்களுக்கு கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு

மேலும் இந்த iOS 10.2 பீட்டா சாப்ட்வேர் புதிய வீடியோ ஆப்களை உங்களுக்காக தருகிறது. இந்த புதிய வீடியோ ஆப்கள், மியூசிக் ஆப்களில் உள்ளது போல எளிமையாக கையாளும் வகையில் உள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

காண்டாக்ட் புகைப்படத்தை மறைத்து கொள்ளலாம்

காண்டாக்ட் புகைப்படத்தை மறைத்து கொள்ளலாம்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய iOS 10.2 பீட்டா சாப்ட்வேர் மூலம் உங்கள் காண்டாக்டில் உள்ள புகைப்படத்தை நீங்கள் விரும்பினால் மறைத்து கொள்ளலாம். இதற்கு செட்டிங்ஸ்- மெசேஜஸ் சென்று போட்டோவை ஹைட் செய்யும் ஆப்சனை க்ளிக் செய்தால் போது.

புதிய ஐமெசேஜ் கொண்டாட்டம்

புதிய ஐமெசேஜ் கொண்டாட்டம்

iOS 10.0விலேயே ஐமெசேஜ் அனுபவத்தை உணர்ந்த ஆப்பிள் வாடிக்கையாளர்கள் இந்த புதிய iOS 10.2 பீட்டா சாப்ட்வேரில் அதன் உச்சகட்ட அனுபவத்தை பெறுவார்கள். இதில் புதிய ஃபுல் ஸ்க்ரீன் ஐமெசேஜ் வசதி உள்ளதால் இந்த சாப்ட்வேர் பயனாளிகள் அனைவருக்கும் புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும்,

புதுவகையான கேமிரா செட்டிங்ஸ்

புதுவகையான கேமிரா செட்டிங்ஸ்

iOS 10.2 பீட்டாவில் மேலும் ஒரு புது வசதியாக கேமிரா ஆப் செட்டிங்ஸ் வசதி உள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் நீங்கள் கடைசியாக கேமிராவில் எந்த மோட்-ஐ பயன்படுத்தினீர்கள் மறும் புகைப்பட ஃபில்டர், லைவ் போட்டோ செட்டிங் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்

மேலும் இந்த புதிய iOS 10.2 பீட்டா சாட்வேரில் சிறி ஸ்ப்ளாஷ் ஸ்க்ரீன், நோட்டிபிகேஷன் விட்ஜெட் ஆகிய அம்சங்கள் உள்ளன. மேலும் இந்த புதிய சாப்ட்வேரை நீங்கள் உங்கள் செகண்டரி டிவைசில் இன்ஸ்டால் செய்து கொள்ள பரிந்துரை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
iOS 10.2 Beta is now available and bring several new changes and features to Apple devices.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X