ஸ்மார்ட்போனை 'இதற்கும்' பயன்படுத்தலாம், இப்படியும் உபயோகிக்கலாம்.!

ஒரு ஸ்மார்ட்போன் நமக்கு பல விஷயங்களை இலவச செய்து தருவது மட்டுமின்றி நம்முடைய பல வேலைகளை எளிதாக்குகிறது.

Written By:

ஒரு ஸ்மார்ட்போன் என்பது கால் வந்தால் பேசுவதற்கோ அல்லது கால் செய்வதற்கோ அல்ல. அதையும் தாண்டி பலவித செயல்களை அந்த ஸ்மார்ட்போன் நமக்காக செய்கிறது. ஒரு நல்ல ஸ்மார்ட்போன் நமது பெர்சனல் அசிஸ்டேண்ட் செய்யும் வேலையை கச்சிதமாக எந்தவித தவறும் இன்றி செய்து விடுகிறது.

ஸ்மார்ட்போனை 'இதற்கும்' பயன்படுத்தலாம், இப்படியும் உபயோகிக்கலாம்.!

அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் அரட்டை, இண்டர்நெட்டில் அளவில்லா அறிவு, இசை கேட்பது, செல்பி உள்பட புகைப்படங்களை எடுத்து தள்ளுவது, வீடியோக்கள் எடுப்பது உள்ளிட்ட பல விஷயங்களுக்கு ஒரு ஸ்மார்ட்போன் உதவுகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

தங்க நிற மாறுபாட்டில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 - லீக்ஸ் தகவல்.!

ஆனால் பலர் அறிந்திராத ஒரு விஷயம் என்னவெனில் நாம் காசு கொடுத்து செய்ய வேண்டிய பல விஷயங்களை ஒரு ஸ்மார்ட்போன் நமக்கு இலவச செய்து தருவது மட்டுமின்றி நம்முடைய பல வேலைகளை எளிதாக்குகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

வரவு - செலவை பார்க்க வேண்டுமா?

உங்களுடைய கணக்குப்பிள்ளை அல்லது அக்கவுண்டண்ட் போல உங்கள் ஸ்மார்ட்போன் செயல்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? உங்களுடைய வரவு என்ன? செலவு என்ன? ஆகியவற்றை பதிவு செய்து மாதந்தோறும் உங்களுக்கான ஒரு பட்ஜெட்டையும் போட்டு கொடுக்கும் ஆப்ஸ்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் கொட்டி கிடக்கின்றன.

இத்தகைய ஆப்ஸ்களை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால் அப்புறம் உங்களுக்கு தனியாக ஒரு அக்கவுண்டண்ட் என்பதே தேவையில்லை. மேலும் நீங்கள் ஒவ்வொரு மாதமும் எதில் அதிக செலவு செய்கிறீர்கள் என்பதை அறிந்து அதில் செலவை குறைத்து கொள்ளவும் முடியும்

 

இதய துடிப்பை தெரிந்து கொள்ள வேண்டுமா?

இதய துடிப்பு அதிகமாகிவிட்டால் உடனே பலர் ஒரு நல்ல மருத்துவரிடம் சென்று நம்முடைய இதய துடிப்பு நார்மல்தானா? என்பதை செக் செய்து கொள்வார்கள். ஆனால் தற்போது அத்தகைய அலைச்சலும் பண செலவும் தேவையில்லை.

இதய துடிப்புகளை துல்லியமாக கண்டறிந்து சொல்வதற்கென ஏராளமான ஆப்ஸ்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை டவுண்லோடு செய்துவிட்டு உங்கள் கேமிரா முன் உங்கள் விரல் ஒன்றை வைத்து ப்ளாஷை சிறிது நேரம் அழுத்தினால் போதும். உங்கள் இதய துடிப்பு விபரங்கள் துல்லியமாக தெரிந்து விடும்

 

வீடு ஒழுகுறதை கண்டுபிடிக்க வேண்டுமா?

மழைக்காலத்தில் எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் ஏதாவது ஒருசில இடத்தில் ஒழுகும் என்று கூறுவார்கள். ஜன்னல், கதவு, சீலிங், சுவர் ஆகியவற்றில் தண்ணீர் ஒழுகுவது அல்லது லீக் ஆவது போன்ற பிரச்சனை இருந்தால் உடனே உங்கள் ஸ்மார்ட்போனை எடுங்கள்.

அதில் கேமிராவை ஆன் செய்து கொண்டு அதில் உள்ள செட்டிங்கில் 'பிளிர் என்பதை ஆன் செய்து கொண்டு பார்த்தால் ஒழுகும் இடத்தை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். அதன்பின்னர் அந்த இடத்தை மராமத்து பார்த்தால் லீக் நின்றுவிடும்

 

பார்கோட் அல்லது QR கோட் ஆகியவற்றை ஸ்கேன் செய்ய...

தற்பொது பெரும்பாலான பொருட்கள் சந்தைக்கு வரும்போது பார்கோட் அல்லது QR கோட் ஆகியவற்றுடன் தான் வருகின்றன. இந்த பார்கோட் குறித்து பில் போடும்போது தான் நமக்கு தெரிய வரும். ஆனால் பில் போடும் முன்பே அந்த பொருளின் தயாரிப்பு, விலை உள்பட பல விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கென ஒருசில ஆப்ஸ்கள் இருக்கின்றன.

அந்த ஆப்ஸ்களை டவுண்லோடு செய்து கொண்டால், அதன் மூலம் பார்கோட் குறித்த விபரங்களை பில்போடும் முன்பே அறிந்து கொண்டு அந்த பொருள் நமக்கு தேவையா? தேவையில்லையா? என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்

மொழி பெயர்க்கவும் செய்யும்

நீங்கள் மொழி தெரியாத ஒரு நாட்டில் அல்லது மாநிலத்தில் மாட்டி கொண்டால் எதற்கெடுத்தாலும் கூகுள் மொழி பெயர்ப்புக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் ஸ்மார்ட்போனின் கேமிராவே ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளராக செயல்படும்.

உங்கள் கேமிராவை எடுத்து மொழி தெரியாத டெக்ஸ்ட்களை போட்டோ எடுத்தால் இதற்கென உருவாக்கப்பட்டுள்ள ஆப்ஸ்கள் அந்த மொழியை உங்களுக்கு தெரிந்த மொழிக்கு மாற்றி கொடுத்துவிடும். இதனால் நீங்கள் ஒரு மொழி பெயர்ப்பாளர் இன்றி எந்த மாநிலத்திற்கும், எந்த நாட்டிற்கும் பயமின்றி செல்லலாம்

 

உங்கள் போனை ஒரு மைக் ஆகவும் பயன்படுத்தலாம் என்பது தெரியுமா?

உங்கள் போன் அல்லது கம்ப்யூட்டரில் ஒரு ஆடியோவை பதிவு செய்ய வேண்டும் என்றால் உங்கல் ஹெட்போனில் உள்ள மைக்கை பயன்படுத்துவீர்கள். அல்லது சவுண்ட் ரெகார்டரை பயன்படுத்துவீர்கள். ஆனால்WO Mic போன்ற ஒருசில ஆப்ஸ்கள் உங்களுக்கு மைக் ஆக மட்டும் செயல்படுவதில்லை. அது உங்கள் போனில் உள்ள யூஎஸ்பி, புளூடூத், வைபை ஆகியவற்றிலும் கனெக்ட் செய்திட உதவி செய்யும்

ரிமோட் கண்ட்ரோல் ஆகவும் வேலை செய்யும்

நாம் பல நேரங்களில் டிவி உள்பட பல ரிமோட் கண்ட்ரோலை எங்கேயாவது வைத்துவிட்டு மறந்து விடுவோம். அந்த ரிமோட் கண்ட்ரோல் கிடைக்கும் வரை அந்த சாதனத்தை ஆன் செய்ய முடியாது. ஆனால் அதற்கும் தற்போது ஆப்ஸ்கள் வந்துவிட்டது. பீல் ஸ்மார்ட் ரிமொட், நெக்ஸ்ட் டைம் போன்ற ஆப்ஸ்களை நீங்கள் டவுன்லோட் செய்துவிட்டால் உங்கள் போனில் உள்ள இன்ஃப்ராரெட் சென்சார் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனே ரிமோட் கண்ட்ரோல் ஆக செயல்பட்டு உங்களை அசத்த வைக்கும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!Read more about:
English summary
Here we have detailed some interesting ways that you can use your smartphone in. Take a look at these ways from here.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்