ஹூவாய் நிறுவனம் 2017ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள்.!

2016ஆம் ஆண்டை அடுத்து 2017ஆம் ஆண்டிலும் ஹூவாய் பல புதுப்புது மாடல்களை அறிமுகம் செய்து தங்களது வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய உள்ளது

By Siva
|

சீனாவின் முன்னணி நிறுவனமான ஹாவாய் நிறுவனம் கடந்த 2016ஆம் ஆண்டு பலவிதமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றது. குறிப்பாக ஹார்னர் 5A, ஹானர் 5C, ஹோலி 3, ஹானர் 8, ஹூவாய் P9, ஹானர் 8 ஸ்மார்ட் ஆகிய மாடல்கள் இந்திய வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தன.

இந்நிலையில் 2016ஆம் ஆண்டை அடுத்து 2017ஆம் ஆண்டிலும் இந்நிறுவனம் பல புதுப்புது மாடல்களை அறிமுகம் செய்து தங்களது வாடிக்கையாளர்களை திருப்தி செய்வதோடு புதிய வாடிக்கையாளர்களையும் கவர்ந்து இழுக்க திட்டமிட்டுள்ளது.

வோடபோன் ரெட் பிளான் : அன்லிமிடெட் வாய்ஸ், 3ஜிபி தரவு, என்ன விலை.?

இந்நிலையில் ஹூவாய் நிறுவனத்தின் 2017ஆம் ஆண்டு மாடல் ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

எபிக் ஹானர் ஸ்மார்ட்போன்:

எபிக் ஹானர் ஸ்மார்ட்போன்:

2017ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி இந்நிறுவனம் எபிக் என்ற புதுவித ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டுள்ளதாக அதன் அமெரிக்க டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விரிவான தகவல்கள் வெளிவரவில்லை என்றாலும் இதில் பின்பக்கம் மட்டுமே டூயல் கேமிரா அமைந்துள்ளதாகவும், 2017ஆம் ஆண்டின் புதிய பிராஸசர் உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஹூவாய் P10

ஹூவாய் P10

கடந்த ஆண்டு வெளியான ஹூவாய் P9, இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ஹூவாய் நிறுவனம் ஹூவாய் P10 மாடலை வெளியிட்டு அசத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் மிக அபாரமாக இருப்பதாக விமர்சனங்கள் கூறுகின்றன.

இந்த ஹூவாய் P10 ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் குவட் HD டிஸ்ப்ளே உள்ளது. இதற்கு முந்தைய மாடலில் 5.2 இன்ச் டிஸ்ப்ளேதான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போனின் பின்பக்கம் மட்டுமே இரண்டு நவீன டெக்னாலஜி கேமிரா உள்ளது. இந்த டூயல் கேமிராக்கள் 20 MP மற்றும் 12 MP அளவுகளில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கேமிரா OIS உள்ளது என்பது இதன் கூடுதல் சிறப்பு

ஆண்ட்ராய்டு 7.0 நெளகட் மற்றும் லேட்டஸ் சிப்செட் பிராஸசருடன் இந்த போன் வெளிவந்துள்ளது

ஹூவாய் மேட் S 2

ஹூவாய் மேட் S 2

ஹூவாய் மேட் S 2 மாடல் ஸ்மார்ட்போன் கடந்த பல மாதங்களாக வெளிவரும் என்ற விளம்பரங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில் 2017ல் வந்தே விட்டது. 5.9 இன்ச் HD டிஸ்ப்ளே, 2.6 GHz கிரின் 960 பிராஸசர், 4GB ரேம், 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ், 16 MP மற்றும் 8 MP கேமிராக்கள் உள்ள இந்த போனின்ல் 3500 mAh பேட்டரியும் உள்ளது. மேலும் இந்த மாடலும் ஆண்ட்ராய்டு 7.0 நெளகட் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹூவாய் ஹானர் X3 டேப்ளட்

ஹூவாய் ஹானர் X3 டேப்ளட்

ஹூவாய் நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி டேப்ளட்டிலும் கிங் என்பது தெரிந்ததே. இந்நிறுவனத்தின் முந்தைய மாடல் டேப்ளட்டுக்கள் வாடிக்கையாளர்களை திருப்தி செய்துள்ள நிலையில் தற்போது புதிய மாடலாக ஹூவாய் ஹானர் X3 டேப்ளட் வெளிவரவுள்ளது.

ஆண்ட்ராய்டு அம்சமுள்ள இந்த டேப்ளட் 7 இன்ச் qHD டிஸ்ப்ளேவை முன்பக்கமாக கொண்டது. 64 பிட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 பிராஸசருடன் வெளிவரும் இந்த டேப்ளட்டில் 2 GB ரேம் உள்ளது. மேலும் 64 GB அளவில் இண்டர்னல் ஸ்டோரேஜூம் உள்ளது.

மேலும் ஹூவாய் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஹானர் 6X, இந்த ஆண்டில் வெளிவர உள்ளது. மேலும் ஹானர் மேஜிக் மாடல் இந்த ஆண்டு அல்லது அதன் பின்னர் வர வாய்பு உள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
As 2016 is now a thing of past, we take a look at what Huawei is expected to bring in the world of smartphones in the year 2017

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X