காப்புரிமை செய்வதில் முன்னுரிமை : பதுங்கிப் பாயுமா ஹூவாய்?

By Meganathan
|

புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வது, வித்தியாச தொழில்நுட்பங்களை வழங்குவதில் ஸ்மார்ட்போன் சந்தையில் ஹூவாய் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கின்றது. சாம்சங் போன்ற பெரிய நிறுவனங்களுடன் நேரடி போட்டி போடும் தரமுள்ள கருவிகளை வழங்குவதோடு சியோமி போன்ற நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்குமளவு வளர்ந்திருக்கின்றது.

சிறப்பான பயனர் அனுபவத்திற்கு முன்னுரிமை வழங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றது. சந்தையில் நிலவும் அதிகப்படியான போட்டியிலும் ஹூவாய் நிறுவனம் அதிகப்படியான காப்புரிமைகளை பதிவு செய்து வருகின்றது.

வளர்ச்சி

வளர்ச்சி

ஸ்மார்ட்போன் யுகத்தில் சீரான வளர்ச்சியடைந்திருக்கும் ஹூவாய், அதிகளவு காப்புரிமைகளை பெறுவதன் மூலம் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளையும், சக்திவாய்ந்த கருவிகளையும் வழங்கும் என எதிராப்ர்க்க முடியும். சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் ஹூவாய் காப்புரிமைகளை பெற்று வருகின்றது.

காப்புரிமை

காப்புரிமை

கடந்த சில தசாப்தகங்களில் ஹூவாய் பல்வேறு காப்புரிமைகளை வெளிநாடுகளில் குவித்து வருகின்றது. மொத்தமாக 9000 காப்புரிமைகளில் 2000 காப்புரிமைகளைச் சீனாவிலும், 1100 காப்புரிமைகளை ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இதர பகுதிகளிலும் குவித்து வருகின்றது.

ஆய்வு

ஆய்வு

ஆய்வு மற்றும் பரிசோதனை பிரிவுகளில் ஹூவாய் நிறுவனம் அதிகளவு முதலீடு செய்து வருகின்றது. மற்ற நிறுவனங்களை விட அதிகபட்சமாக சுமார் 10 சதவீத வருவாயினை ஆய்வுப் பணிகளுக்காக செலவிடுகின்றது.

ஆய்வு

ஆய்வு

அதன்படி சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையில் அந்நிறுவனம் 9.2 பில்லியன் டாலர்களை ஆய்வு மற்றும் பரிசோதனைகளுக்காக செலவிட்டிருப்பது தெரியவந்திருக்கின்றது.

காப்புரிமை

காப்புரிமை

2015 ஆம் ஆண்டின் இறுதியில் மட்டும் சுமார் 50,377 காப்புரிமைகளை ஹூவாய் நிறுவனம் பெற்றிருக்கின்றது. இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Huawei patent technology: How the company has emerged as global leader in filing maximum patents

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X