எது பெஸ்ட் டூவல் கேம் : ஹூ வாய் ஹானர் 6எக்ஸ்.? கூல்பேட் கூல் 1.?

ஹானர் 6எக்ஸ் கருவியின் ஒப்பிட முடியாத சிறப்பம்சமான டூவல் கேமராவை கூல்பேட் கூல் 1 கருவியுடன் ஒப்பிடுகிறோம்.!

|

சமீப காலங்களாக பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் ஏகப்பட்ட ஸ்மார்ட்போன்கள் நுழைந்த வண்ணம் உள்ளன. எல்லாமே பட்ஜெட்டின் கீழ் வருவதால் எந்த பிராண்ட் ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் உங்களுள் எழுவது சகஜம் தான்.

ஹானர் 6எக்ஸ் கருவியை உங்களுக்கு பரிந்துரைத்து உங்களின் குழப்பத்தை தீர்த்து வைப்பதோடு ஹானர் 6எக்ஸ் கருவியின் விலை மற்றும் இக்கருவி கொண்டுள்ள தனிப்பட்ட சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதையும் உங்களுக்கு வழங்குகின்றோம். அவைகளையெல்லாம் தெரிந்துகொண்ட பின்னர், வாங்கினா இப்படி ஒரு ஸ்மார்ட்போனைத்தான் வாங்கனும் என்ற எண்ணம் உங்களுக்குள் எழுவதும் சகஜமே. அப்படியாக, இந்த தொகுப்பில் ஹானர் 6எக்ஸ் கருவியின் ஒப்பிட முடியாத சிறப்பம்சமான டூவல் கேமராவை கூல்பேட் கூல் 1 கருவியுடன் ஒப்பிடுகிறோம்.!

கிட்டத்தட்ட ஒன்றுபோல்

கிட்டத்தட்ட ஒன்றுபோல்

ஒரு குறிப்பிட்ட பட்ஜெட் விலையில் ஹானர் 6எக்ஸ் மட்டுமே இரட்டை கேமரா அமைப்பை வழங்கவில்லை சமீபத்தில், வெளியான கூல்பேட் கூல் 1 கருவியிலும் இரட்டை கேமரா அமைப்பு உண்டு. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே கேமராவை தவிர்த்து பிற வன்பொருள் அம்சங்களில் கிட்டத்தட்ட ஒன்றுபோல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளேவை பொறுத்தமட்டில் ஹானர் 6எக்ஸ், 2.5டி வளைந்த கண்ணாடி கொண்ட ஒரு 5.5-அங்குல முழு எச்டியும் கூல்பேட் கூல் 1 ஆனது கார்னிங் கொரில்லா கண்ணாடி 3 தொழில்நுட்பங்கள் கொண்ட அடுக்கு கொண்டு வருகிறது.

வன்பொருள்

வன்பொருள்

கூல்பேட் கூல் 1 கருவியானது 4ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட ஒரு க்வால்காம் ஸ்னாப்டிராகன் 652 சிப்செட் கொண்டுள்ளது. மறுபக்கம் ஹானர் 6எக்ஸ் கிரின் 655 சிப்செட், 3ஜிபி ரேம் + 32ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 4ஜிபி ரேம் + 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு என இரண்டு வகைகளில் வருகிறது.

மென்பொருள்

மென்பொருள்

ஹூவாய் ஹானர் 6எக்ஸ் ஆனது இஎம்யூஐ 4.1 ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்கும். கூல்பேட் கூல் 1 ஆனது லீஈகோவின் தனிப்பயன் இயூஐ 5.6 ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோவை அடிப்படையாக கொண்டு இயங்கும்.

பேட்டரி

பேட்டரி

கூல்பேட் கூல் 1 ஒரு 4,060எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டது மறுபக்கம் ஹூவாய் ஹானர் 6எக்ஸ் ஒரு 3,340எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டுள்ளது.

கேமரா

கேமரா

கேமரா துறையை பொறுத்தமட்டில் இரண்டு போன்களிலுமே ஒரு இரட்டை கேமரா அமைப்பு இருக்கிறது என்றாலும் அவற்றின் செயல்பாடுகள் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. ஹானர் 6எக்ஸ் ஒரு 12எம்பி மற்றும் 2எம்பி சோனி ஐஎம்எக்ஸ்386 சென்சார் கொண்டு வருகிறது. இதன் 12 எம்பி வழக்கமான கேமரா போல் படங்களை பதிவு செய்ய இதன் 2எம்பி அதன் ஆழத்தை அதிகரிக்கும். இன்னும் சொல்லப்போனால் ஹானர் 6எக்ஸ் ஆனது போக்கே போன்ற திஎஸ்எல்ஆர் விளைவு படங்களை வழங்கும்.

மறுபக்க கூல்பேட் கூல் 1, எப்/ 2.0 துளை கொண்ட 13எம்பி இரட்டை கேமரா அமைப்பு கொண்டுள்ளது. ஹூவாய் பி9 போன்ற இதன் சென்சார்கள் மிருதுவான மற்றும் நன்கு விரிவான படங்களை கைப்பற்றுகிறது. காகிதத்தில், இரண்டு கேமராக்கள் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக இருந்தாலும் உண்மையான வாழ்க்கையில் குறைந்த ஒளியில் கூட நல்ல புகைப்படங்களை வழங்கும் ஹானர் 6எக்ஸ் ஒருப்படி முன்னே இருக்கிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஹானர் 6எக்ஸ் - இது திணறாது, ஆனால் திணறடிக்கும்.! ஏன் தெரியுமா.?

Best Mobiles in India

English summary
Huawei Honor 6X vs CoolPad Cool 1 Who wins the battle of dual camera phones. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X