
இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்டது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டதாக இருக்கும் என்று பலர் எதிர்பார்த்தனர்.
ஆனால் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டதாக இருக்கும்.
800 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கியூவல்காம் எம்எஸ்எம்7225ஏ ஸ்னாப்டிராகன் கார்டெக்ஸ் ஏ-5 பிராசஸரில் கலக்ககும் இந்த அசன்டு ஒய்-200 ஸ்மார்ட்போன் தேவையான சவுகரியங்களையும் வழங்கும். இதன் மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளும் வசதியினையும் வழங்கும்.
இதில் முகப்பு கேமரா கொடுக்கப்படவில்லை தான். ஆனாலும் இந்த அசன்டு ஒய்-200 ஸ்மார்ட்போனில் 3.15 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறந்த துல்லியத்தினை பெற முடியும்.
இந்த கேமரா 2048 X 1536 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். இதனால் புகைப்படமோ, வீடியோ ரெக்கார்டிங்கோ சிறந்த துல்லியத்தில் பெறலாம். இதன் லித்தியம் அயான் பேடட்டரி 2ஜி மற்றும் 3ஜி வசதிக்கு
முழுமையாக துணை புரியும்.
ஹுவெய் நிறுவனத்தின் இந்த அசன்டு ஒய்-200 ஸ்மார்ட்போன் ரூ. 8,190 விலையில் கிடைக்கும்.





























