புதிதாக அறிமுகமாகியுள்ள நோவா-நோவா ப்ளஸ் ஸ்மார்ட்போன் எப்படி உள்ளது?

By Siva
|

பெர்லின் நகரில் நடைபெற்ற IFA கண்காட்சியில் ஸ்மார்ட்போனின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ஹூவாய் (Huawei) நிறுவனம் நோவா சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிதாக அறிமுகமாகியுள்ள நோவா-நோவா ப்ளஸ் ஸ்மார்ட்போன் எப்படி உள்ளது?

ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 6. இரண்டிற்கும் என்ன வித்தியாசம்

நோவா மற்றும் நோவா ப்ளஸ் வகை போன்களான இவை கிரே, சில்வர், கோல்ட் ஆகிய கலர்களில் கிடைக்கின்றது. இனி இந்த போன் குறித்த விவரங்களை பார்ப்போம்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஹூவாய் நோவா டிசைன் எப்படி

ஹூவாய் நோவா டிசைன் எப்படி

நெக்ஸஸ் 6P போன்ற தன்மையை கொண்ட இந்த ஸ்மார்ட்போ அலுமினியம் மற்றும் மெக்னீசியம் கொண்ட கலவையினால் தயார் செய்யப்பட்டுள்ளதால் உறுதியாக உள்ளது.

டிஸ்ப்ளே எப்படி இருக்கும் தெரியுமா?

டிஸ்ப்ளே எப்படி இருக்கும் தெரியுமா?

ஹூவாய் நோவா ஸ்மார்ட்போன் 5 இன்ச் HD டிஸ்ப்ளேவுடன் 1920x1080 பிக்சல் தன்மை கொண்டது.

பிராஸசர் தன்மை என்ன?

பிராஸசர் தன்மை என்ன?

ஆக்டோகோர் 2GHz ஸ்னாப்டிராகன் 625 சிப் கொண்ட பிராஸசர் இருப்பதால் போனின் வேகம் சூப்பராக இருக்கும். மேலும் 3020mAh பேட்டரி இதில் பொருத்தப்பட்டிருப்பதால் இரண்டு நாட்கள் சார்ஜ் நிற்கும் தன்மை கொண்டது.

128ஜிபி மெமரி கார்டு போடலாம்

128ஜிபி மெமரி கார்டு போடலாம்

ஹூவாய் நோவா ஸ்மார்ட்போன் 3GB LPDDR3 ரேம், 32GB ROM ஆகியவையோடு 128GB வரை மெமரி கார்டு போட்டுக்கொள்ளலாம். மேலும் ஆண்ட்ராய்டு 6.0 வகையை சேர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கத்.

கேமரா எப்படி இருக்கும்?

கேமரா எப்படி இருக்கும்?

12எம்பி பின்கேமிராவில் ஆட்டோபோக்ஸ் இருப்பதால் உங்களுக்கு போகஸ் செய்ய வேண்டிய கவலையே இல்லை. மேலும் 8 எம்பி செல்பி கேமரா மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சர் ஆகியவை இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

என்ன வெயிட் இருக்கும் இந்த போன்?

என்ன வெயிட் இருக்கும் இந்த போன்?

151.8x75.7x7.3mm அளவில் உள்ள இந்த போனின் வெயிண்ட் ஜஸ்ட் 160 கிராம்கள் என்பது இன்னொரு சந்தோஷமான விஷயம்

மல்ட்டி யூசர்களுக்கு சரியான போன்

மல்ட்டி யூசர்களுக்கு சரியான போன்

நோவா ப்ளஸ் ஸ்மார்ட்போனில் பல தனித்தனியாக புரொபைல் இருப்பதால் பலரும் அவரவர்களது தனித்தன்மையுடம் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் பொதுவாகவும் ஒருசில ஆப்ஸ்களை பயன்படுத்தலாம்.

டிரை ஆக்சியல் ஓஐஎஸ் டெக்னாலஜி:

டிரை ஆக்சியல் ஓஐஎஸ் டெக்னாலஜி:

நோவா ப்ளஸ் மாடலில் 16MP பின்கேமரா மற்றும் எல்.இ.டி பிளாஷ மற்றும் PDAF, OIS உள்ளது. மேலும் 8MP செல்பி கேமிராவும் இதில் உள்ளது.

நோவா ப்ளஸில் பேட்டரி எப்படி?

நோவா ப்ளஸில் பேட்டரி எப்படி?

இந்த மாடல் ஸ்மார்ட்போனில் 3,340mAh பேட்டரி இருப்பதால் கண்டிப்பாக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும். ஸ்டோரேஜை பொருத்தவரை 3GB ரேம் மற்றும்32GB ROM மேலும் 128GBவரை மெமரி கார்டு போட்டுக்கொள்ளும் வசதியும் உண்டு.

Best Mobiles in India

Read more about:
English summary
After the launch of the best possible smartphone this year -- Mate 8 and P9, the company has returned to the slightly more affordable segment. Huawei has officially announced the launch of its Nova series of the smartphones at IFA 2016, Berlin. This Nova lineup has -- Nova and Nova Plus. Both the smartphones will come in Titanium Grey, Mystic

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X