Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

இந்திய மொழிகளுக்கு சப்போர்ட் செய்யும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்!

Updated: Monday, March 25, 2013, 17:48 [IST]

htc smartphones to support indian languages
எச்டிசி ஸ்மார்ட்போன்கள் பிராந்திய மொழிகளுக்கும் சப்போர்ட் செய்யும் புதிய வசதிகளை வழங்க உள்ளது.

சமீபத்தில் எச்டிசி ஸ்மார்ட்போன்கள் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷன் வசதிகளை பெற்று வந்தது. இந்த ஐஸ்சிஎஸ் அப்டேஷன் வசதி வாடிக்கையாளர்கள் மிக அதிகமாக எதிர்பார்க்கும் ஒன்றாக இருக்கிறது.

இதனால் ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.

இதனால் எச்டிசி நிறுவனம் தனது நிறைய ஸ்மார்ட்போன்களில் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷன் வசதியினை வழங்கியது.

இப்போது இதை தொடர்ந்து இன்னும் ஒரு புதிய வசதியினை வழங்குகிறது எச்டிசி நிறுவனம். தமிழ், ஹிந்தி, மராத்தி என்று பிராந்திய மொழிகளுக்கு சப்போர்ட் செய்யும் தொழில் நுட்ப வசதியினை சில ஸ்மார்ட்போன்களில் வழங்க உள்ளது எச்டிசி நிறுவனம்.

தமிழ், ஹிந்தி, மராத்தி என்று இந்த மூன்று மொழிகளுக்கும் சப்போர்ட் செய்யும் வசதியினை எச்டிசி ஒன் எக்ஸ், எச்டிசி ஒன் எஸ், எச்டிசி டிசையர் சி, எச்டிசி டிசையர் வி ஆகிய ஸ்மார்ட்போன்களில் வழங்க இருக்கிறது.

எல்லோருக்கும் ஆங்கிலம் தெரியும் என்று சொல்லிவிட முடியாது. இதனால் ஸ்மார்ட்போன்களில் பல விஷயங்களை புரிந்து கொள்வதிலும் சில பிரச்சனைகள் இருக்கின்றது.

ஆனால் தமிழ், ஹிந்தி, மராத்தி என்று இந்த மொழிகளுக்கும் சப்போர்ட் செய்யும் வசதிகள் ஸ்மார்ட்போன்களில் கிடைத்தால் வாடிக்கையாளர்களுக்கு அது பெரும் வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேணடும். இந்த வரப்பிராசத்தினை வழங்க உள்ளது எச்டிசி நிறுவனம்.

Story first published:  Tuesday, July 17, 2012, 16:39 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll