Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

எச்டிசி ஒன் வி மற்றும் சோனி எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள்: ஓர் சிறிய ஒப்பீடு

Updated: Monday, March 25, 2013, 17:38 [IST]

htc one v and sony xperia u
ஸ்மார்ட்போன் சந்தைகளில் போட்டி போட்டு கொண்டு புதிய தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன மொபைல் நிறுவனங்கள். இதில் உயர்ந்த தொழில் நுட்பத்தினை வழங்கும் எச்டிசி ஒன் வி ஸ்மார்ட்போனுக்கு, சோனி எக்ஸ்பீரியா யூ ஸ்மார்ட்போன் சிறந்த போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எச்டிசி ஒன் வி ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். சோனி எக்ஸ்பீரியா-யூ ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அப்கிரேட் வசதியினையும் பெறலாம்.

எக்ஸ்பீரிய-யூ ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் பிராசஸரையும் கொண்டது. எச்டிசி ஒன் வி ஸ்மார்ட்போனின் ஆன்ட்ராய்டு இயங்குதளத்திற்கு இதன் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸர் துணை புரியும்.

எக்ஸ்பீரியா-யூ ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், விஜிஏ டியூவல் கேமராவினையும் வழங்கும். எச்டிசி ஒன் வி ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறந்த புகைப்படத்தினையும், வீடியோவினையும் கொடுக்கும்.

திரையில் எச்டிசி ஸ்மார்ட்போன், எக்ஸ்பீரியா-யூ ஸ்மார்ட்போனை முந்துகிறது. எச்டிசி ஒன் வி ஸ்மார்ட்போன் 3.7 இஞ்ச் திரை வசதியினை கொண்டது. ஆனால் எக்ஸ்பீரியா-யூ ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் திரையை கொண்டது.

2ஜி மற்றும் 3ஜி தொழில் நுட்பத்திற்கும் சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதிக்கும் சப்போர்ட் செய்யும். எச்டிசி ஒன் வி ஸ்மார்ட்போன் 4 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை வழங்கும்.

இப்படி தொழில் நுட்பத்தில் நிறைய வேறுபாட்டினை கொண்டிருக்கும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் விலையிலும் சிறிய வித்தியாசத்தினை கொண்டுள்ளன.

அந்த வகையில் இதன் விலை விவரத்தினையும் பார்ப்போம். எச்டிசி ஒன் வி ஸ்மார்ட்போன் ரூ.18,000 விலை கொண்டது. சோனி எக்ஸ்பீரியா-யூ ஸ்மார்ட்போன் ரூ.17,399 விலை கொண்டதாக இருக்கும்.

Story first published:  Wednesday, May 30, 2012, 11:15 [IST]
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil

Also Read

Opinion Poll