எஹ்டிசி நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் இது தான்

Written By:

எஹ்டிசி நிறுவனத்தின் அடுத்த வகை ஸ்மார்ட்போன் பற்றி தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி குறித்த தகவல்கள் மர்மமாக இருக்கும் நிலையில் இதன் சிறப்பம்சங்கள் மற்றும் கசிந்துள்ள புகைப்பரடங்களை மட்டும் அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

எஹ்டிசி ஒன் எம்9

எஹ்டிசி நிறுவனத்தின் மூலம் வெளியாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் எஹ்டிசி ஒன் எம்9 என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவை எஹ்டிசி ஹீமா என்று அழைக்கப்படுகின்றது.

வெளியீடு

புதிய எஹ்டிசி ஹீமா மார்ச் முதல் வாரம் அல்லது இரண்டாவது வார்த்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வடிவமைப்பு

பெரிய எஹ்டி டிஸ்ப்ளே மற்றும் 7 எம்எம் அளவு மெலிதாக இருக்கும் ஆக்டா கோர் ஸ்மார்ட்போன் எஹ்டிசி ஹீமா.

பிராசஸர்

எஹ்டிசி ஹீமா குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டு இயங்கும்.

மெமரி

மெமரியை பொருத்த வரை 32 முதல் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

டிஸ்ப்ளே

2560*1440 எல்சிடி மற்றும் கியுஎஹ்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும்.

கேமரா

கேமராவை பொருத்த வரை 20 எம்பி ப்ரைமரி கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பேட்டரி

2840 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு எஹ்டிசி ஹீமா சக்தியூட்டப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இயங்குதளம்

எஹ்டிசி ஒன் எம் 9 ஹீமா ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் மூலம் இயங்கும் என்றும் அதனுடன் HTC Sense 7.0 இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

விலை

இத்தனை சிறப்பம்சங்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில் இதன் விலை குறைந்தபட்சம் 40,000 ரூபாய் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

புகைப்படம் : போன்டிசைனர்.ஈயு (Phonedesigner.eu)

English summary
HTC One M9 leak-based renders. check out here about HTC One M9 leak-based specifications and photographs.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்