கேலக்ஸி கருவிகளுடன் ரூ.17,000 மதிப்புள்ள 256ஜிபி மைக்ரோ எஸ்டி இலவசம்.!

இந்த சலுகையை ஏற்கனவே கேலக்ஸி எஸ்7 கருவிகள் வாங்கியவர்களுக்கும் உண்டு.!

Written By:

ஒருவேளை இதுதான் சாம்சங் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் மிக சிறந்த முறையிலான சலுகையாக இருக்கலாம் என்று நினைத்தாலும் சரி இதுதான்ப்பா நிஜமான அதிரடி சலுகை என்று நினைத்தாலும் சரி - இரண்டுமே சரிதான்.!

சாம்சங் நிறுவனம் அதன் அனைத்து சாம்சங் கேலக்ஸி எஸ்7 ஸ்மார்ட்போன்களுடனும் சேர்த்து முற்றலும் இலவசமாக ஒரு 256ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டை வழங்கும் என்ற அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்7 மற்றும் எட்ஜ் கருவிகளுடன் 256ஜிபி மைக்ரோ எஸ்டி அட்டையை முற்றிலும் இலவசமாக பெறுவது எப்படி என்பதை பற்றிய வழிகாட்டல் தொகுப்பே இது.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஏவோ + மைக்ரோ எஸ்டி கார்டு

முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் மெமரி கார்டு ஆனது ஒன்றும் மிகவும் மலிவான அல்லது தரமற்ற ஒன்று அல்ல - அது ரூ.17,000 (250 டாலர்கள்) ஒரு ஏவோ + மைக்ரோ எஸ்டி கார்டு ஆகும்.

கனவு கருவி

ஒருவேளை இந்த நடவடிக்கையானது புதிய எஸ்8 கருவி வெளியீடு நிகழ்வதற்குள் எஸ்7 கருவிகளை விற்றுத்தீர்க்கும் ஒரு எண்ணம் கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டாலும் எஸ்7 கருவிகளானது இன்றுவரையிலாக பெரும்பாலானோர்களின் கனவு கருவி என்பதும், முக்கிய குறிப்பாக இந்த சலுகை இப்போதைக்கு அமெரிக்காவில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதும், இந்த தொகுப்பு அமெரிக்க வாழ் தமிழ் கிஸ்பாட் வாசகர்களுக்கானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில்

எஸ் 7 கருவிகளின் விலையை குறைப்பதை விட இது நிஜமாகவே ஒரு சிறப்பான விற்பனை தூண்டுதல் முயற்சியாகும். விலையுயர்ந்த மைக்ரோ எஸ்டி கார்டு வழங்கி ஒரே நேரத்தில் இரண்டு பொருட்களையும் விற்பனை செய்கிறது.

மகத்தான 95எம்பி / நொடி

ஒரு பாரிய சேமிப்பு தேர்வான இந்த கிளாஸ் 10 எஸ்டி அட்டை அதற்கேற்றவாறு யூ3 தரத்திற்கு பொருந்தக்கூடிய ஒரு மகத்தான 95எம்பி / நொடி என்ற டேட்டா ரைட் நிகழ்த்தும் திறன் கொண்ட இதை இலவசமாக கேலக்சி எஸ்7 கருவியுடன் பெற இங்கே கிளிக் செய்யவும்.

ரசீது

மற்றும் இந்த சலுகையை ஏற்கனவே கேலக்ஸி எஸ்7 கருவிகள் வாங்கியவர்களுக்கும் உண்டு. அதற்கு இங்கே கிளிக் செய்யவும் அதற்கு முன்பு கருவி வாங்கிய ரசீது கையில் இருப்பதை உறுதி செய்துக்கொள்ளவும்.

மேலும் படிக்க

இந்தியாவில் விற்பனைக்கு வருமா சியாமி மி 6 மாடல்?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
How to get a free 256GB micro SD card with Samsung Galaxy S7, Edge. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்