வெற்றிப் பாதையில் இரண்டாம் ஆண்டு தொடர்ந்து முன்னேரும் ஹானர்..

Written By:

ஹூவாய் பிரான்டு ஹானர் எனும் பிரான்டு உருவாக்கி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டது. இதோடு ஹானர் பிரான்டு குறைந்த காலகட்டத்தில் அதிவேக வளர்ச்சியை எட்டியிருக்கின்றது.

இண்டர்நெட் யுகத்தில் வளர்ந்து வரும் இளைஞர்களுக்கான பிரான்டு இது என ஹானர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹானர் பிரான்டின் கீழ் வெளியான ஹானர் 6 பிளஸ் கருவியில் துவங்கி விரைவில் வெளியாக இருக்கும் ஹானர் 8 கருவி வரை அதிகளவு சிறப்பம்சங்கள் அனைத்துப் பிரிவுகளிலும் சக்தி வாய்ந்ததோடு சரியான விலையிலும் வெளியிடப்பட்டு வருகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

அறிமுகம்

அக்டோபர் 2014 ஆம் ஆண்டு ஹானர் முதல் கருவி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்தது, இந்தக் கருவி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அனைவரும் அறிந்ததே.

வரவேற்பு

ஹானர் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு விழாவில் முழுமையான வெற்றிப்பாதையாக அமைந்தது. ஹானர் 6 பிளஸ், ஹானர் 6, ஹானர் 5சி, ஹானர் 4எக்ஸ் என அனைத்துக் கருவிகளும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

அம்சம்

இந்த பட்டியலில் புதிய கருவியும் இணைய இருக்கின்றது. அதன் படி ஹானர் 8 கருவியில் டூயல் கேமராவில் அதி நவீன கேமரா கொண்டிருக்கின்றது. புதுவித கண்டுபிடிப்பு, அதிக தரம் மற்றும் சக்தி வாய்ந்த அம்சங்களைக் கொண்ட பிரான்டு எனச் சந்தையில் அறியப்படுகின்றது.

கவனம்

இதோடு ஹானர் நிறுவனம் இந்திய சந்தையில் அதிக கவனம் செலுத்த இருப்பதாகவும் இதன் காரணமாக 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் தனது கருவிகளை தயாரிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

முன்னேற்றம்

கடந்த சில காலங்களில் ஹூவாய் நிறுவனம் ஹானர் பிரான்டிங் கீழ் வெளியிட்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
honor-turns-two-tracing-the-journey-to-the-future
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்