ஹால்லி 2 ப்ளஸ், ரெட்மி 3 எதை வாங்கினால் நல்லது.??

Written By:

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கருவிகளை வாங்க பல்வேறு ஆப்ஷன்கள் அதாவது ஏகப்பட்ட கருவிகள் இருக்கின்றது. அதிக விலையில் இருந்து, மலிவு விலை வரை என அனைத்து ரகங்களிலும் வாங்க பல்வேறு மாடல்கள் இருக்கின்றன. ஆன்லைனில் வேகமாக வளர்ந்து வரும் ஹானர் பிரான்ட் சமீபத்தில் ஹால்லி 2 ப்ளஸ் என்ற ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் ரூ.8,499 என்ற பட்ஜெட் விலையில் வெளியாகியிருக்கும் ஹால்லி 2 ப்ளஸ் கருவியில் பல்வேறு சக்திவாய்ந்த அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை சியோமி ரெட்மி 3 கருவியை போன்றே அம்சங்கள் கொண்டிருப்பதால் இந்த இரு கருவிகளுக்கும் ஏகப்பட்ட போட்டி நிலவுகின்றது.

இங்கு இரு கருவிகளின் சிறப்பம்சங்களையும் விரிவாக தொகுத்திருக்கின்றோம். ஹானர் ஹால்லி 2 ப்ளஸ் மற்றும் சியோமி ரெட்மி 3 கருவிகளின் அம்சங்களை பார்த்து எது சிறந்தது என்பதை ஸ்லைடர்களில் பாருங்கள்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
எச்டி திரை

1

ஹானர் ஹால்லி 2 ப்ளஸ் மற்றும் சியோமி ரெட்மி 3 கருவிகளில் 5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி எச்டி திரை மற்றும் 1280*720 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. இரு கருவிகளிலும் ஒரே திரை மற்றும் ரெசல்யூஷன் வழங்கப்பட்டிருந்தாலும் ப்ரைட்னஸ் அளவில் இரு கருவிகளிலும் வித்தியாசங்கள் இருக்கின்றது.

பிராசஸர்

2

ஹானர் ஹால்லி 2 ப்ளஸ் கருவியில் MT6735 குவாட்கோர் சிப்செட் மற்றும் சியோமி ரெட்மி 3 கருவியில் ஸ்னாப்டிராகன் 616 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

ரேம்

3

இரு கருவிகளிலும் 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஹால்லி 2 ப்ளஸ் கருவியில் 32 ஜிபி வரையிலும் ரெட்மி 3 கருவியில் 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
ரெட்மி 3 கருவியில் இரண்டாவது சிம் ஸ்லாட் பயன்படுத்தி மெமரிகார்டு பொருத்தி கொள்ள வேண்டும், இதனால் ஒரு சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் ஹானர் 2 ப்ளஸ் கருவியில் இரு சிம் ஸ்லாட் மற்றும் தனி மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

4

பேட்டரி திறன்களை பொருத்த வரை இரு கருவிகளிலும் அதிகளவு பேட்டரி வழங்கப்பட்டுள்ளன. ஹானர் 2 ப்ளஸ் கருவியில் 4000 எம்ஏஎச் பேட்டரியும், ரெட்மி 3 கருவியில் 4100 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

5

இரு கருவிகளிலும் 13 எம்பி கேமரா, எல்இடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இரு கருவிகளிலும் ஒரே அளவு கேமரா வழங்கப்பட்டிருந்தாலும், புகைப்பட தரம் இரு கருவிகளிலும் வேறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கனெக்டிவிட்டி

6

கனெக்டிவிட்டியை பொருத்த வரை இரு கருவிகளிலும் 4ஜி எல்டிஇ, டூயல் சிம், வை-பை, ப்ளூடூத் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

இயங்குதளம்

7

மென்பொருள்களை பொருத்த வரை இரு கருவிகளிலும் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டிலும் அந்தந்த நிறுவனங்களின் யூஸர் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது. ஹானர் 2 ப்ளஸ் கருவியில் EMUI 3.1 மற்றும் ரெட்மி 3 கருவியில் MIUI 7 வழங்கப்பட்டுள்ளது.

விலை

8

ஹானர் ஹால்லி 2 ப்ளஸ் கருவி இந்தியாவில் ரூ.8,499க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெட்மி 3 கருவியின் விலை ரூ.7,490 ஆகும்.

மேலும் படிக்க

9

சாம்சங் புதுவரவு : கேலக்ஸி ஜெ5, ஜெ7 (2016) அறிமுகமானது.!!

ஆன்லைனில் களமிறங்கும் ரிலையன்ஸ்.!!

முகநூல்

10

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
honor holly 2 plus vs xiaomi redmi 3 which budget phone gives more
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்