ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் புதுமை : அசத்தும் ஹானர்.!!

By Meganathan
|

புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் ஹானர் நிறுவனம் முன்னணி வகிக்கின்றது. இந்நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் கருவிகளின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்களை வழங்கியுள்ளது. அந்த வகையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹானர் 5எக்ஸ் கருவி சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அனைத்து பட்ஜெட் ரகங்களிலும் புதுமையை புகுத்தும் நிறுவனமாக ஹானர் அறியப்படுகின்றது. அந்த வகையில் ஸ்மார்ட்போன் கருவிகளில் கைரேகை ஸ்கேனர் அறிமுகம் செய்த நிறுவனங்களில் ஹானர் நிறுவனமும் ஒன்று. இன்று பல்வேறு நிறுவங்களும் கைரேகை ஸ்கேனர் வழங்கினாலும் ஹானர் நிறுவன கைரேகை ஸ்கேனர் வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றன.

01

01

ஹானர் நிறுவனத்தின் 5எக்ஸ் கருவியில் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ஐந்து கைரேகைகளை பதிவு செய்து கொள்ள முடியும். மேலும் பயனர்கள் குறிப்பிட்ட சேவைகளை இயக்கவும் கைரேகைகளை பதிவு செய்து கொள்ள முடியும்.

02

02

பயனர்களின் ஒட்டு மொத்த அனுபவத்தையே மாற்றியமைத்திட அதிவேகமான கைரேகை ஸ்கேனர் தொழில்நுட்பம் அவசியம் ஆகும். மேலும் இதன் முக்கிய அம்சம் ஸ்கேனர் பொருத்தப்பட்டிருக்கும் இடம் தான், இதை பொருத்தே அதன் இயக்கம் தீர்மானம் செய்யப்படுகின்றது.

03

03

ஹானர் 7 கருவியும் அதிக சக்திவாய்ந்ததாகவும், சிறப்பான அம்சங்களும் கொண்டிருந்தது. துவக்கத்தில் ப்ரீமியம் அதாவது விலை உயர்ந்த கருவிகளில் மட்டும் வழங்கப்பட்டு வந்த கைரேகை ஸ்கேனர் அம்சம் ஹூவாய் நிறுவன வரவால் பரவலான கருவிகளும் கைரேகை ஸ்கேனர் கொண்டிருந்தன.

04

04

ஹானர் பிரான்டு ஸ்மார்ட்போன் சந்தையில் மலிவு விலை மற்றும் பட்ஜெட் விலைக்கு ஏற்ப சிறப்பம்சங்களை முழுமையாக மாற்றியமைத்தது.

05

05

இதை தவிர்த்து ஹானர் 7 கருவியில் சேஃப் மோடு வழங்கப்பட்டிருந்தது, இதில் பயனர்கள் தங்களது தனிப்பட்ட புகைப்படம், வீடியோ மற்றும் ஆடியோ போன்ற தரவுகளை சேமித்து கொள்ள முடியும். இதனினை தனி கடவுச்சொல் அல்லது கைரேகை ஸ்கேனர் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
Honor drives innovation in smartphone technology! Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X