ஹானர் 8 - ஒன்பிளஸ் 3 : எது சிறந்தது.??

இந்திய சந்தையில் கிடைக்கும் இரு பட்ஜெட் ரகக் கருவிகளை அதன் அம்சங்களுடன் ஒப்பிட்டுத் தலைசிறந்த கருவி எது என்பதை இங்குத் தொகுத்திருக்கின்றோம்.

By Meganathan
|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் ரகக் கருவிகளில் சிறந்தவற்றைத் தேர்வு செய்வது எப்பவும் சிக்கலான விடயம் தான். சிறப்பான வன்பொருள் மற்றும் மென்பொருள் என மிகப்பெரிய நிறுவனங்களுடன் கடுமையான போட்டி நிலவும் என்பதால் பயனர்களுக்கு அதிகப்படியான கருவிகள் கிடைக்கின்றன.

இங்குப் பட்ஜெட் விலையில் கிடைக்கும் இரு கருவிகளை இங்கு ஒப்பீடு செய்து சிறந்த கருவி எது என்பதைப் பார்க்க இருக்கின்றோம். ஆப்பிள், சாம்சங், எல்ஜி போன்ற கருவிகளை விட இந்தக் கருவிகள் பாதி விலையில் கிடைக்கின்றன.

ஒன்பிளஸ் 3 மற்றும் ஹூவாய் ஹானர் 8 என இரு கருவிகளும் ரூ.30,000/- பட்ஜெட்டிற்குள் கிடைக்கின்றது. இவற்றில் சிறந்த கருவி எது என்பதை விரிவான அம்சங்களை வைத்துப் பார்ப்போமா.?

வடிவமைப்பு

வடிவமைப்பு

ஹானர் 8 மற்றும் ஒன் பிளஸ் 3 கருவிகள் இரண்டும் அதிகத் தரம் கொண்ட கிளாஸ் மற்றும் மெட்டல் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு கருவிகளும் அழகாகக் காட்சியளித்தாலும் ஹானர் 8 கருவியானது 2.5D Curved Glass பாடி மூலம் உயர்ந்து நிற்கின்றது. ஒன் பிளஸ் 3 கருவியில் மெட்டாலிக் ரியர் பேனல் கொண்டுள்ளது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளேவை பொருத்த வரை இரு கருவிகளிலும் ஃபுல் எச்டி திரை மற்றும் 1920*1080 பிக்ஸல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இருந்தும் ஹானர் 8 கருவியின் 5.2 இன்ச் திரை சிறப்பான மல்டிமீடியா அனுபவத்தை வழங்குகின்றது. இரு கருவிகளை ஒப்பிடும் போது ஹானர் 8 டிஸ்ப்ளே அழகாகவும் காட்சிகளைத் துல்லியமாகவும் பிரதிபலிக்கின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கேமரா

கேமரா

நல்லதாக ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்க அனைவரும் அதிகம் எதிர்பார்க்கும் அம்சமாக அவற்றின் கேமரா இருக்கும். அந்த வகையில் பார்க்கும் போது சிறப்பான கேமரா கொண்ட கருவியாக ஹானர் 8 இருக்கின்றது. ஹானர் 8 கருவியில் இரு 12 எம்பி சோனி IMX286 சென்சார்கள், f/2.2 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளன. இதனால் அதிகத் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

ஒன்பிளஸ் 3 கருவியைப் பொருத்த வரை 16 எம்பி பிரைமரி கேமராவு, ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அம்சம் மூலம் துல்லியமான படங்களைப் பெற முடியும் என்றாலும் ஹானர் 8 கருவியுடன் ஒப்பிடும் போது சற்றே பின்தங்கியிருக்கின்றது.

வன்பொருள் மற்றும் மென்பொருள்

வன்பொருள் மற்றும் மென்பொருள்

ஒன்பிளஸ் 3 கருவியானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 குவாட்கோர் பிராசஸர் கொண்டு இயங்குகின்றது.

ஹானர் 8 கருவியானது ஹூவாய் நிறுவனத்தின் சொந்த கிரின் 950 ஆக்டாகோர் பிராசஸர் கொண்டு இயங்குகின்றது.

மென்பொருள் அம்சங்களை வைத்து பார்க்கும் போது ஹானர் 8 மற்றும் ஒன்பிளஸ் கருவிகள் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் மற்றும் இரு கருவிகளின் சொந்த யூஸர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கின்றது.

மெமரி

மெமரி

ஹானர் 8 கருவியைப் பொருத்த வரை 32 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகின்றது. ஒன்பிளஸ் 3 கருவியில் 64ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது, எனினும் மெமரியினைக் கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படவில்லை.

மற்ற அம்சங்கள்

மற்ற அம்சங்கள்

கூடுதல் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இரு கருவிகளிலும் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 3 கருவியில் கைரேகை ஸ்கேனர் முன்பக்கமும், ஹானர் 8 கருவியில் பயோமெட்ரிக் சென்சார் பின்புறமும் வழங்கப்பட்டுள்ளன.

கருவியை அன்லாக் செய்தல், புகைப்படம் எடுத்தல், கேலரியினை இயக்குதல், நோட்டிபிகேஷன்களை இயக்குதல், அழைப்புகளை ஏற்பது மற்றும் நிராகரித்தல் என ஹானர் 8 கைரேகை ஸ்கேனர் பல்வேறு அம்சங்களை இயக்க வழி செய்கின்றது.

எது சிறந்தது

எது சிறந்தது

இரு கருவிகளும் தலைசிறந்த அம்சங்களைக் கொண்டிருந்த போதும் ஹானர் 8 கருவியானது வடிவமைப்பு, கேமரா உள்ளிட்ட அம்சங்களில் புதுமையைப் புகுத்தி சிறந்த கருவியாக இருக்கின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Honor 8 vs OnePlus 3: Find Out Who Wins the Title of Best Mid-Range Android Flagship Smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X