புதிய தொழில்நுட்பம் மூலம் பேட்டரி பேக்கப் : உத்திரவாதம் அளிக்கும் ஹானர்.!!

Written By:

ஸ்மார்ட்போன் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் ஹானர் பிரான்ட் தனது கருவிகளின் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகின்றது. பயனர்களுக்குத் தேவையான அம்சங்களைக் குறைந்த விலையில் ஹானர் வழங்குகின்றது. அந்த வரிசையில் அந்நிறுவனம் வெளியிட்ட புதிய கருவி தான் ஹானர் 5சி. அதிக அம்சங்கள் ஆனால் விலை மட்டும் குறைவு தான்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

01

இந்தியாவில் ரூ.10,999 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படும் ஹானர் 5சி கிரின் 650 சிப்செட் கொண்டு கருவியினை மின்னல் வேகத்தில் இயக்க வழி செய்கின்றது. இதோடு இதன் பேட்டரி பேக்கப் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் ஒரு நாள் பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கின்றது.

02

ஹானர் 5சி ஸ்மார்ட்போன் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி கொண்டுள்ளது. இந்த பேட்டரியின் முக்கிய அம்சம் இது 650Wh/L என்ற கணக்கில் மின்சக்தியைப் பயன்படுத்துவது ஆகும். இதன் மூலம் போன் அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும்.

03

ஹானர் 5சி கருவியின் மற்றொரு அம்சம் FinFET 16 nm சிப் தொழில்நுட்பம் ஆகும். இதனால் 28nm சிப்செட் கொண்ட கருவிகளை விட அதிவேகமாக இயங்கும் என்பதோடு பேட்டரியும் அதிக திறன் கொண்டதாக இருக்கின்றது.

04

big.LITTLE வடிவமைப்பு கொண்ட சிப் 65 சதவீத அதிகமான பிராசஸிங் வேகம் மற்றும் 40 சதவீத மின்பயன்பாட்டை கட்டுப்படுத்தும் என்பதால் அதிக நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும்.

05

ஹான்ர புதிய கருவி ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்குவதால் மேம்படுத்தப்பட்ட பேட்டரி பேக்கப் கிடைக்கும். இதோடு ஹானர் 5சி கருவியானது WMUI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருப்பதால் பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போகாமல் இருக்கும்.

06

வழங்கப்பட்டுள்ள தொழில்நுட்ப அம்சங்கள் ஹானர் 5சி கருவியினை அதிக நேரம் பேட்டரி பேக்கப் வழங்கச் செய்வதோடு கருவியின் வேகத்தையும் சீராக வைக்க உதவுகின்றது.

07

இதோடு 5.2 இன்ச் FHD ஐபிஎஸ் டிஸ்ப்ளே ஹானர் 5சி கருவியினை கையில் கச்சிதமாகப் பொருந்தும் படி இருக்கின்றது. இதோடு 2ஜிபி ரேம், 16ஜிபி ரோம் மற்றும் மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Honor 5C with powerful battery is an awesome partner for long journeys Top 3 Reasons Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்