கேமரா பிரியர்களைக் கவரும் ஹானர் 5சி.!!

By Meganathan
|

அதிகளவு எதிர்பார்ப்புகளுடன் சில வாரங்களுக்கு முன் தான் ஹானர் 5சி இந்தியாவில் வெளியிடப்பட்டது. சந்தையில் கிடைக்கும் மற்ற கருவிகளை விட சக்திவாய்ந்த அம்சங்கள் கொண்ட கருவியாக ஹானர் 5சி இருக்கின்றது. அதிகளவு அம்சங்களோடு பட்ஜெட் விலையில் கிடைப்பதால் இந்தக் கருவி இந்திய சந்தைக்கு கச்சிதமான ஒன்றாக இருக்கின்றது.

கேமரா பிரியர்களைக் கவரும் ஹானர் 5சி.!!

ஹானர் 5சி கருவியானது மெட்டல் வடிவமைப்பு, கிரின் 650 சிப்செட் மற்றும் 16nm தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் மூலம் அதிகளவு பேட்டரி பேக்கப் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் சியோமி ரெட்மி நோட் 3 கருவியின் விலை ரூ.11,999 ஆனால் ஹானர் 5சி கருவி ரூ.10,999 என்ற விலையில் கிடைக்கின்றது.

புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் பயனர்கள் பெரும்பாலும் அதிக தரம் கொண்ட கேமரா இருக்கின்றதா என்பதையே அதிகம் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் சியோமி ரெட்மி நோட் 3 மற்றும் ஹானர் 5சி கேமரா அம்சங்களைத் தான் இந்தத் தொகுப்பில் ஒப்பிட்டிருக்கின்றோம்.

கேமரா

கேமரா

ஹானர் 5சி கருவியில் 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதோடு எல்இடி பிளாஷ் மற்றும் PDAF போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. சியோமி ரெட்மி நோட் 3 கருவியில் 16 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

செல்பீ

செல்பீ

ஹானர் 5சி கருவியில் 8 எம்பி செல்பீ கேமரா மற்றும் வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. சியோமி ரெட்மி நோட் 3 கருவியில் 5 எம்பி செல்பீ கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஹானர் 5சி கருவியின் செல்பீ கேமராவின் வைடு ஆங்கிள் லென்ஸ் மூலம் அதிகப்படியான இடத்தை பதிவு செய்ய முடியும்.

மாற்றம்

மாற்றம்

ஹானர் 5சி கருவி பயனர்களுக்கு சிறப்பான புகைப்படங்களை வழங்க பல்வேறு கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. புகைப்படம் எடுக்கும் இடத்தில் இருக்கும் வெளிச்சத்திற்கு ஏற்ப கட்டுப்பாடுகளை மாற்றியமைக்கும் வசதி போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

பிராசஸர்

பிராசஸர்

புகைப்படங்கை மாற்றியமைக்கச் சக்திவாய்ந்த பிராசஸர்கள் அவசியம் ஆகும். இதனைப் பூர்த்தி செய்யும் விதமாக ஹானர் 5சி கருவியில் 650 கிரின் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கருவி சீரான வேகத்தில் இயங்குவதோடு சிறப்பான பயனர் அனுபவத்தையும் வழங்குகின்றது.

திரை

திரை

ஹானர் 5சி கருவியில் எடுத்த அழகான புகைப்படங்களை சிறிதளவும் குறையில்லாமல் திரையில் பிரதிபலிக்க 5.2 இன்ச் FHD திரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நிறங்களையும் மற்ற டிஸ்ப்ளேக்களை விடத் தெளிவாக பிரதிபலிக்கும்.

Best Mobiles in India

English summary
Honor 5C vs Redmi Note 3: 5 Reasons why 5C is a delight for camera lovers Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X