அசத்தும் ஹானர் : ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட் வெளியீடு.!!

By Meganathan
|

ஹானர் 7 மற்றும் ஹானர் 5எக்ஸ் கருவிகளைத் தொடர்ந்து ஹானர் பிரான்டின் அடுத்த கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹானர் 5சி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்தக் கருவி இந்திய பட்ஜெட் கருவிகளுக்கு போட்டியிடும் வகையில் அமைந்துள்ளது.

அதன் படி இந்தியாவில் ரூ.10,999 விலைக்குக் கிடைக்கும் ஹானர் 5சி கிரே, சில்வர் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கும் இந்தக் கருவியானது ஹானர் ஸ்டோர் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என்றும் இதற்கான முன்பதிவு இன்று துவங்கி ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

01

01

ஹானர் 5சி கருவியானது 5.2 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் திரை, 1920*1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கின்றது.

02

02

ஆக்டா கோர் கிரின் 650 16nm பிராசஸர் மற்றும் Mali T830 GPU வழங்கப்பட்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 SoC பிராசஸரை விடத் திறன் வாய்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

03

03

மெமரியை பொருத்த வரை ஹானர் 5சி கருவியில் 2ஜிபி ரேம், 16ஜிபி ரோம் மற்றும் மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

04

04

மெட்டல் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள ஹானர் 5சி 13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ், மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கின்றது.

05

05

ஹானர் 5சி கேமரா அம்சங்கள் சிறப்பான புகைப்படம் எடுக்க வழி செய்யும். இதில் சூப்பர் நைட் மோடு, பியூட்டி மற்றும் லைட் பெயின்டிங் போன்ற அம்சங்களும், ப்ரோ மோடு மூலம் ISO, shutter speed, focus, white balance, exposure போன்றவைகளை மாற்றிக்கொள்ளும் வசதி போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

06

06

ஹானர் 5சி கருவியானது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் மற்றும் ஹூவாய் EMUI4.1 கொண்டுள்ளது.

07

07

டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் இந்த கருவியில் 4ஜி எல்டிஇ, வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

08

08

இதோடு ஹானர் பிரான்டிங் கொண்ட டி1 7.0 டேப்ளெட் கருவியும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 7 இன்ச் WSVGA ஐபிஎஸ் திரை மற்றும் 1024*600 ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது.

09

09

ஹானர் டி1 7.0 டேப்ளெட் கருவியானது 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்ப்ரெட்ரம் SC7731G குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது. இதோடு 8 ஜிபி ரோம் மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

10

10

ஆண்ட்ராய்டு 4.4 கிட்காட் இயங்குதளம் மற்றும் ஹூவாய் எமோஷன் UI 3.0 மற்றும் 2 எம்பி ப்ரைமரி மற்றும் முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. 4100 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதோடு இதன் விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 5C, Honor T1 7.0 Tab with Promising Features Launched at Rs 10,999 and Rs 6,999 Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X