வரலாறு : கூகுள் நெக்சஸ்..!!

By Meganathan
|

ஒரு வழியாக கூகுள் நிறுவனம் தனது புதிய கருவிகளை நேற்று நடைபெற்ற விழாவில் அரிமுகம் செய்தது. இவ்விழாவில் புதிய நெக்சஸ் 5எக்ஸ் மற்றும் நெக்சஸ் 6பி உள்ளிட்ட சில கருவிகளை அறிமுகம் செய்ததோடு அடுத்த வாரத்தில் அந்நிறுவனத்தின் புதிய இயங்குதளமான ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ நெக்சஸ் கருவிகளுக்கு மட்டும் வழங்கப்படும் என தெரிவித்தது.

அடுத்த வாரம் முதல் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ..!!

ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் எதிர்பார்க்ப்பட்ட நெக்சஸ் கருவிகள் தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் வேலையில் கூகுள் நிறுவனத்தின் நெக்சஸ் கருவிகள் கடந்து வந்த பாதையை விரிவாக இங்கு அறிந்து கொள்ளுங்கள்..

ஜனவரி 2010

ஜனவரி 2010

உலகின் முதல் நெக்சஸ் கருவியான நெக்சஸ் 1 கருவியானது 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது. இந்த கருவியை எச்டிசி நிறுவனம் தயாரித்தது. ஆண்ட்ராய்டு 2.1 எக்ளேர், சிங்கிள் கோர் பிராசஸர், 512 எம்பி ரேம் மற்றும் 5 எம்பி ப்ரைமரி கேமராவோடு கூகுள் வாய்ஸ் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டன.

டிசம்பர் 2010

டிசம்பர் 2010

கூகுள் நிறுவனத்தின் இரண்டாவது நெக்சஸ் கருவியை தயாரித்தது சாம்சங் நிறுவனம். நெக்சஸ் 2 கருவி நெக்சஸ் எஸ் என அழைக்கப்பட்டு இந்த கருவி 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இந்த கருவியில் ஆண்ட்ராய்டு 2.3 ஜின்ஜர் ப்ரெட், 4 இன்ச் திரை, 5 எம்பி ப்ரைமரி கேமரா, 512 எம்பி ரேம் மற்றும் என்எப்சி சப்போர்ட் வழங்கப்பட்டது.

டிசம்பர் 2011

டிசம்பர் 2011

டிசம்பர் மாதம் 2011 ஆம் ஆண்டு வெளியான நெக்சஸ் கருவி கேலக்ஸி நெக்சஸ் என அழைக்கப்பட்டது. இதுவே கூகுள் நிறுவனம் சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த கடைசி கருவி ஆகும்.

நவம்பர் 2012

நவம்பர் 2012

2012 ஆம் ஆண்டு வெளியான நெக்சஸ் 4 கருவியை எல்ஜி நிறுவனம் தயாரித்தது. இதை தொடர்ந்து எல்ஜி நிறுவனம் நெக்சஸ் 5 மற்றும் நெக்சஸ் 5எக்ஸ் கருவிகளை தயாரித்ததும் குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 2013

அக்டோபர் 2013

தயாரிப்பின் போதே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கருவி தான் நெக்சஸ் 5. எல்ஜி நிறுவனம் தயாரித்த இந்த கருவி பார்க்க மிகவும் எளிய வடிவமைப்பு மற்றும் சிறந்த தோற்றம் கொண்டிருந்தது.

நவம்பர் 2014

நவம்பர் 2014

மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் கருவியை தழுவிய கருவியாக நெக்சஸ் 6 இருந்தது. இதற்கு முக்கிய காரணமாக நெக்சஸ் கருவியன் அளவு கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 2015

செப்டம்பர் 2015

இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நெக்சஸ் கருவி தான் நெக்சஸ் 5எக்ஸ். இந்த கருவியையும் தயாரித்ததும் எல்ஜி நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 2015

செப்டம்பர் 2015

மோட்டோரோலா தயாரித்த நெக்சஸ் 6 கருவியை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நெக்சஸ் 6பி கருவியை ஹூவாய் நிறுவனம் தயாரித்துள்ளது.

போட்டி

போட்டி

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய நெக்சஸ் கருவிகள் இந்தாண்டின் தீபாவளியை குறிவைத்து விற்பனைக்கு வெளியாகலாம் என்றும் இவ்வாறு வெளியாகும் பட்சத்தில் இந்த கருவிகள் மற்ற நிறுவனங்களுக்கு பலத்த போட்டியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

தொகுப்பு : ஆண்ட்ராய்டுபிட்.காம்

Best Mobiles in India

Read more about:
English summary
history of the Google Nexus phone series. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X