ரூ.8,999க்கு வெளியாக இருக்கும் மோட்டோ ஜி4 பிளே : அதிரடி அம்சங்கள்.!!

Written By:

மோட்டோ ஜி4 மற்றும் மோட்டோ ஜி4 பிளஸ் போன்ற கருவிகள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தக் கருவிகள் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே வெளியான கருவிகளோடு சேர்த்து அந்நிறுவனம் புதிய கருவி ஒன்றையும் வெளியிட இருக்கின்றது.

சில நாட்களுக்கு முன் இணையதளங்களில் ரகசியமாக வெளியான மோட்டோ ஜி4 பிளே கருவி விரைவில் இந்தியாவில் வெளியிடப்படலாம் எனச் செய்திகள் மீண்டும் வெளியாகத் துவங்கியுள்ளன. அதன் படி புதிய கருவியில் என்னென்ன அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றது என்பதை ஸ்லைடர்களில் பாருங்கள்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

டிஸ்ப்ளே

மோட்டோ ஜி4 பிளே கருவியில் 5 இன்ச் 720பிக்சல் டிஸ்ப்ளே கொண்டிருக்கலாம். இதனால் இந்தச கருவி மோட்டோ ஜி4 மற்றும் ஜி4 பிளஸ் கருவிகளை விடச் சிறிய மாடல் என்றே கூற முடியும்.

பிராசஸர்

மோட்டோ ஜி4 பிளே கருவியானது 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸப் மற்றும் 2 ஜிபி ரேம் கொண்டிருக்கலாம்.

மெமரி

இந்தக் கருவியில் இரண்டு வித மெமரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். 8 ஜிபி மற்றும் 16 ஜிபி. இதோடு மெமரியை 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம்.

கேமரா

கேமராவை பொருத்த வரை மோட்டோ ஜி4 பிளே 8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்படலாம். இதோடு பல்வேறு கேமரா அம்சங்களும் வழங்கப்படலாம்.

கனெக்டிவிட்டி

இந்தக் கருவியில் 4ஜி எல்டிஇ, 3ஜி, வை-பை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ் மற்றும் டூயல் சிம் வசதி வழங்கப்பட்டுள்ளது.

வாட்டர் ப்ரூஃப்

நானோ-கோட்டிங் செய்யப்பட்டுள்ளதால் இந்தக் கருவியானது நீரில் நனைந்தால் எதுவும் ஆகாது.

பேட்டரி

2800 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Highlighted Features OF Moto G4 Play Coming Soon to India at Rs 8,999 Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்