பெரிய போன், பெரிய பீச்சர்கள் ஆனா விலை கம்மி தான்.!!

Written By:

சமீப காலங்களில் வெளியாகும் ஸ்மார்ட்போன் கருவிகள் பெரும்பாலும் 4.7 முதல் 5.2 இன்ச் வரை திரை கொண்டிருக்கின்றன. சில கருவிகளில் 5.5 இன்ச் திரை வழங்கப்படுகின்றன, அவை பெரிய திரை கருவிகள் என அழைக்கப்படுகின்றன.

பெரும்பாலான பயனர்கள் பெரிய திரை, மெலிய அளவு மற்றும் நீண்ட பேட்டரி பேக்கப் வழங்கும் கருவிகளை அதிகம் விரும்புவர். ஆனால் சில பெரிய திரை கருவிகள் மட்டுமே குறைந்த அல்லது பட்ஜெட் விலையில் கிடைக்கின்றன. அதிலும் சில கருவிகளில் குறைபாடுகள் மற்றும் அழகிய வடிவமைப்பு போன்றவை கிடைப்பதில்லை.

இந்தக் குறையை போக்க லாவா மொபைல்ஸ் நிறுவனம் கடுமையாக உழைத்ததன் விளைவாக இந்திய சந்தையில் புதிய லாவா கருவி ஒன்று கிடைத்திருக்கின்றது. அனைவரும் வாங்கக் கூடிய பட்ஜெட் விலையில் அமைந்துள்ளது லாவா எக்ஸ்50.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

போட்டி

மைக்ரோமேக்ஸ், ஜியோணி, சியோமி மற்றும் இன்டெக்ஸ் போன்ற நிறுவனங்களுடன் நேரடி போட்டி காணும் லாவா வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் அமைந்துள்ளது. பெரிய திரை கொண்ட போன்களை வாங்கத் திட்டமிடுவோருக்கு 5.5 இன்ச் லாவா எக்ஸ்50 சரியான தேர்வாக இருக்கும்.

திரை

ஒரே கையில் கருவியினை பயன்படுத்த வழி செய்யும் ஒன்-ஹேண்ட் ஆப்பரேஷன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஹோம் பட்டனினை இரு முறை தொடர்ச்சியாக கிளிக் செய்தால் திரையை சிறியதாக்கி மீண்டும் பெரிதாக்கி கொள்ள முடியும்.

செயல்பாடு

லாவா எக்ஸ்50 கருவியில் 2 ஜிபி ரேம், 2800 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4ஜி எல்டிஇ வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியில் 4ஜி வசதியைத் தொடர்ந்து டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

8 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா, இரு கேமராக்களுக்கும் எல்இடி பிளாஷ் லைட் வழங்கப்பட்டுள்ளதோடு ஸ்லோ மோ அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் ஜெஸ்ட்யூர்

ஆணட்ராயாடு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டிருக்கும் லாவா எக்ஸ் 50 பல்வேறு ஸ்மார்ட் ஜெஸ்ட்யூர் ஆப்ஷன்களையும் கொண்டிருக்கின்றது.

விலை

இத்தனை சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும் லாவா எக்ஸ்50 ஸ்மார்ட்போன் கருவியின் விலை இந்திய சந்தையில் ரூ.8,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Here’s Why LAVA X50 is the most comfortable big screen phone in the market right now
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்