ஆண்ட்ராய்டு போனில் மல்டி விண்டோக்களை ஓப்பன் செய்வது எப்படி?

Written By:

ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை மேலும் மேலும் கவர அவ்வப்போது ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் பல புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். போட்டிகள் நிறைந்த ஸ்மார்ட்போன் சந்தையில் அப்போதுதான் ஒரு நிலையான இடத்தை தக்க வைத்து கொள்ள முடியும்.

ஆண்ட்ராய்டு போனில் மல்டி விண்டோக்களை ஓப்பன் செய்வது எப்படி?

இந்நிலையில் சமீபத்தில் அறிமுகமான வசதி ஸ்பிளிட் ஸ்க்ரீன் என்று சொல்லக்கூடிய ஒரே ஸ்க்ரீனில் இரண்டு விண்டோக்களை ஓப்பன் செய்வது. கம்ப்யூட்டரில் மட்டுமே சாத்தியப்பட்ட இந்த வசதியை சாம்சங் நிறுவனம் தனது புதிய மாடல்களில் அறிமுகம் செய்திருந்தாலும் தற்போது ஆண்ட்ராய்டு 7.0 நெளகத் வெர்ஷனில் இந்த வசதி எளிமையாக கிடைக்கின்றது.

எவ்வித எரர் இன்றி யூட்யூப் வீடியோக்களைப் பார்ப்பது எப்படி?

இதனால் பல முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் ஆண்ட்ராய்டு 7.0 நெளகத்-ஐ அப்டேட் செய்து வருகின்றனர். இருப்பினும் மொபைல் போனில் ஸ்பிளிட் ஸ்கிரீனை வரவழைப்பதிலும், பயன்படுத்துவதிலும் பலர் குழப்பம் அடைந்துள்ளனர். அவர்களுக்காக இதோ எளிய வழிகளில் மல்டி விண்டோக்களை ஸ்மார்ட்போன்களில் ஓப்பன் செய்வது எப்படி என்பதை நாங்கள் விளக்குகிறோம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

குறைந்தது இரண்டு ஆப்ஸ்களை டவுண்லோடு செய்யுங்கள்:

மல்டி விண்டோ அல்லது ஸ்பிளீட் ஸ்க்ரீன் வசதியை உங்கள் மொபைலில் செயல்படுத்த குறைந்தது இரண்டு ஆப்ஸ்களாவது உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்க வேண்டும். ஒருவேளை அப்படி இல்லாவிட்டால் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்

ஸ்பிளிட் ஸ்க்ரீன் மோட்-ஐ வரவழைப்பது எப்படி?

ஆப்ஸ்களை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்த பின்னர், அந்த ஆப்ஸ்களில் ஒன்றின் மீது கை வைத்து அழுத்தி ஹோல்ட் செய்ய வேண்டும். இப்போது ஒரு ஆப் உங்கள் ஸ்க்ரீனில் தோன்றும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இரண்டாவது ஆப்ஸை ஸ்க்ரினுக்கு கொண்டு வர என்ன செய்ய வேண்டும்?

இரண்டாவதாக எந்த ஆப் உங்களுக்கு ஸ்க்ரீனில் தோன்ற வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அந்த ஆப்-ஐ, முதல் ஆப் அருகில் தோன்றும்படி டிராக் செய்யுங்கள்

இரண்டு ஆப்ஸ்களையும் ரீசைஸ் செய்ய வேண்டும்

இப்போது நீங்கள் டிராக் செய்த இரண்டு ஆப்ஸ்களும் திரையில் வலது இடது புறமாகவோ அல்லது மேல்கீழ் வசமாக இருக்கும். இது அந்த ஆப்ஸ்களின் வடிவத்தின் தன்மையை பொருத்தது. ஒருவேளை இரண்டு வெவ்வேறு சைஸ்களில் இருந்தால் மீதமிருக்கும் கருப்பு நிற வெற்றிடத்தை நிரப்பும் வகையில் டிராக் செய்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.,

இரண்டில் ஒரு ஆப்-ஐ மாற்ற என்ன செய்ய வேண்டும்?

மல்டி விண்டோ மூலம் தற்போது உங்கள் மொபைலில் இரண்டு ஆப்ஸ்கள் இருக்கும். இவற்றில் இரண்டில் ஒன்றை மாற்ற வேண்டும் என்றால் மீண்டும் மல்டி டேப் பட்டனை க்ளிக் செய்து உங்களுக்கு தேவையான ஆப்-ஐ தேர்வு செய்தால் நீங்கள் விரும்பிய ஆப் மாறிவிடும்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
Android 7.0 Nougat update brings a slew of cool new features. One of the most interesting features is the support for Multi-Windows.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்