ஆப்பிள் ஐபோனில் ஒரே ஒரு ஹோம் பட்டன் செய்யும் மாயாஜாலங்கள்

ஆப்பிள் ஐபோன் ஹோம் பட்டன் செய்யும் பலவித மாயாஜாலங்களை பார்ப்போமா.

Written By:

தற்போதைய ஸ்மார்ட்போன் உலகில் ஐபோன் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை குறைவானது என்றாலும், ஐபோனுக்கு என்று ஒரு தனி மரியாதை உள்ளது. இந்த ஐபோனில் உள்ள பல வசதிகள் அதன் உபயோகிப்பார்களுக்கே இன்னும் தெரியாத நிலை உள்ளது.

ஆப்பிள் ஐபோனில் ஒரே ஒரு ஹோம் பட்டன் செய்யும் மாயாஜாலங்கள்

குறிப்பாக ஹோம் பட்டன் செய்யும் பலவித மாயாஜாலங்களை ஐபோன் உபயோகிப்பாளர்கள் தெரிந்து வைத்திருப்பார்களா? என்பது சந்தேகம்தான். ஐபோனின் ஹோம் பட்டன் என்னவெல்லாம் செய்யும் என்பதை பார்ப்போமா..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

சிங்கிள் பிரஸ் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?

முதலில் சிங்கிள் பிரஸ்ஸில் இருந்து ஆரம்பிப்போம். ஐபோனில் உள்ள ஹோம் பட்டனை ஒரே ஒரு முறை அதாவது சிங்கிள் பிரஸ் செய்தால் நீங்கள் ஏற்கனவே இன்ஸ்டால் செய்து வைத்துள்ள ஆப்ஸ், செட்டிங்ஸ், பிரெளசர் மற்றும் 2வது, 3வது பக்கங்கள் தோன்றும். மேலும் உங்கள் ஐபோன் லாக் செய்யப்பட்டிருந்தாலும், ஹோம் பட்டனை ஒரே ஒருமுறை பிரஸ் செய்வதன் மூலம் உங்களுக்கு வந்த நோட்டிபிகேசனை பார்க்கும் வசதி உளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே ஒரு முறை அதே நேரத்தில் லாங் பிரஸ் செய்தால் என்ன நடக்கும்?

ஐபோனில் 'சிறி' (Siri) வசதி இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த சிறியை ஓப்பன் செய்ய ஹோம் பட்டனை ஒரே ஒரு முறை அதே நேரத்தில் ஒரு லாங் பிரஸ் அழுத்தினால் போதுமானது. ஆனால் அதற்கு முன்னர் நீங்கள் Settings > General > Accessibility > Home Button சென்று அதில் உள்ள ஸ்குரோல் டவுனில் Press and Hold To Speak என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஜியோவின் அடுத்த புரட்சி உங்கள் மொபைல் நம்பரில்.!

ஹோம் பட்டனை டபுள் பிரஸ் செய்தால் என்ன நடக்கும்?

ஐபோனில் இரண்டு முறை ஹோம் பட்டனை பிரஸ் செய்தால் நீங்கள் இதற்கு முன்னர் உபயோகித்த ஆப்ஸ் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த மல்டி டேஸ்க் மெனுவை நீங்கள் க்ளியர் செய்யவும், இந்த டபுள் பிரஸ் உதவும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டபுள் பிரஸ் ஓகே, டபுள் டேப் செய்தால் என்ன நடக்கும்?

ஐபோனின் ஹோம் பட்டனை டபுள் பிரஸ் செய்தால் மல்டிடேஸ்க் கிடைக்கும் என்பதை பார்த்தோம். அதே நேரத்டில் இரண்டு முறை டேப் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா? உங்கள் ஐபோனில் உள்ள முக்கியமானவற்றை உதாரணமாக ஆப்பிளின் முக்கிய ஆப்ஸ்கள் ஹோம் பக்கத்தில் கிடைக்கும்., ஆனால் இதற்கு நீங்கள் Settings > General > Accessibility சென்று அதில் உள்ள ஸ்குரோல் டவுனில் "Reachability" என்பதை ஆக்டிவேட் செய்ய வேண்டும்

ஐபோனை ஓப்பன் செய்ய அல்லது லாக் செய்ய என்ன செய்ய வேண்டும்?

ஐபோனை லாக் செய்யவோ அல்லது ஓப்பன் செய்யவோ வேண்டுமானால் உங்கள் விரலை ஐபோன் ஹோம் பட்டனில் வைத்தால் போதும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில், Settings > General > Accessibility > Home Button சென்று அதில் உள்ள Rest Finger to Open என்பதை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் உங்கள் விரல் ஸ்க்ரீனில் பட்டவுடன் ஒப்பன் அல்லது லாக் விடும்

மூன்று முறை பிரஸ் செய்தால் என்ன நடக்கும்?

ஒருமுறை, இரண்டு முறை ஹோம் பட்டனில் பிரஸ் செய்தால் என்ன நடக்கும் என்பதை பார்த்தோம். தற்போது மூன்று முறை தொடர்ந்து பிரஸ் செய்தால் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம். மூன்று முறை தொடர்ந்து பிரஸ் செய்தால் உங்கள் ஐபோனில் உள்ள முக்கியமான வசதிகள் திரையில் தோன்றும். உதாரணமாக மேக்னிஃபையர், வாய்ஸ் ஓவர், இன்வர்ட் கலர், கலர் ஃபில்டர், ஜூம் உள்பட ஒருசில வசதிகள் திரையில் தோன்றும். ஆனால் இதற்கு நீங்கள் செட்டிங் சென்று General > Accessibility > Accessibility Shortcut சென்று டிபிள் பிரஸ் ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
Your Apple iPhone's home button could do a lot more than you anticipated.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்