சாம்சங் கேலக்ஸி நோட் 7 மாடலுக்கு மாற்று போன்கள் எவை எவை?

Written By:

கொரியாவின் சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்பான கேலக்ஸி நோட் 7 மாடல் தோல்வி அடைந்தது என்பதும் இந்த மாடலை இந்நிறுவனம் திரும்ப பெற்று அதற்கு பதிலாக வேறு மாடல் ஸ்மார்ட்போனை வழங்கி வருகிறது என்பதும் தெரிந்ததே.

சாம்சங் கேலக்ஸி நோட் 7 மாடலுக்கு மாற்று போன்கள் எவை எவை?

இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி மாடலுக்கு பதிலாக வேறு என்னென்ன மாடல்கள் இருக்கும் என்ற தேடல் பொதுமக்களிடையே இருந்து வரும் நிலையில் அதே போன்று அதிநவீன வசதிகள், பெரிய ஸ்க்ரீன், தரமான பிராஸசர் ஆகிய அம்சங்களை கொண்ட ஐந்து மாடல் ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஒன்ப்ளஸ் 3: (OnePlus 3)

ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் நான்காவது மாடலாக வெளிவந்திருக்கும் இந்த ஒன்ப்ளஸ் 3 மாடல், சாம்சங் கேலக்ஸி நோட் 7 மாடலுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் வாடிக்கையாளர்களின் திருப்தியை பெற்றுள்ளது. ரூ.27,999 விலையில் சந்தையில் விற்பனை ஆகி வரும் இந்த ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் குவாட் HD அமொல்ட் டிஸ்ப்ளெவை கொண்டது. கிட்டத்தட்ட சாம்சங் கேலக்ஸி நோட் 7 மாடலுக்கு சமமான தோற்றத்தை கொண்ட இந்த போனில் அதே குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர், 6ஜிபி ரேம், 64 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவை உள்ளது. மேலும் USB டைப் சார்ஜரின் மூலம் மிகக்குறைந்த காலத்தில் சார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் உண்டு.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஐபோன் 7 பிளஸ்: (iPhone 7 Plus)

ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தி பழகியவர்கள் மிக எளிதில் iOS போனை பயன்படுத்த முடியாதுஜ் ஆனால் சாம்சங் கேலக்ஸி நோட் 7 மாடலுக்கு இணையாக இந்த ஐபோன் 7 ப்ளஸ் மாடலில் சிறப்பு அம்சங்கள் உள்ளது. ஆப்பிள் கிளவுட் மூலம் இதில் உள்ள வசதிகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் சாம்சங் கேலக்ஸி நோட் 7 மாடலுக்கு நல்ல மாற்றாக இந்த மாடல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எட்ஜ் S 7: (Samsung Galaxy Edge S7)

சாம்சங் கேலக்ஸி நோட் 7 மாடல் திடீர் திடீரென வெடித்து விபத்தை ஏற்படுத்துவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அந்நிறுவனமே மாற்று போனாக சாம்சங் கேலக்ஸி எட்ஜ் S 7 மாடலைத்தான் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தது. சாம்சங் கேலக்ஸி நோட் 7 மாடலில் உள்ள சிறப்பு அம்சங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட இந்த மாடலில் இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு சரியான மாற்றாக இருக்கும் என்று கருதப்படுகிறது. குவால்கோம் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர், 12எம்பி பின் கேமிரா, 5 எம்பி செல்பி கேமிரா ஆகிய அம்சங்கள் இந்த மாடலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கூகுள் பிக்சல் XL: (Google Pixel XL)

சாம்சங் கேலக்ஸி நோட் 7 மாடலுக்கு சரியான மாற்றாக கூகுள் பிக்சல் XL மாடல் அமைந்துள்ளதாக பலர் கருத்து கூறி வரும் நிலையில் சந்தையில் வெளிவந்துள்ள மிகச்சிறந்த கேமிரா உள்ள போன்களில் ஒன்றாக இந்த போன் கருதப்படுகிறது. மேலும் கூகுள் அசிஸ்டெண்ட் ஆக உதவும் முதல் மாடல் ஸ்மாட்ர்போன் இதுதான்

ரூ.76,00 விலையில் ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனையாகி வரும் இந்த கூகுள் பிக்சல் XL மாடல் போனில் 1.6GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர் மற்றும் 4 ஜிபி ரேம், மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 போன்ற அம்சங்களை இந்த மாடல் கொண்டுள்ளது.

 

மோட்டோ Z ப்ளே (Moto Z Play)

நீங்கள் இதுவரை மோட்டோரோ நிறுவனத்தின் ரசிகராக இருந்தால் புதியதாக வெளிவந்துள்ள இந்த மாடல் போனை கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம். சமீபத்தில் வெளியாகியுள்ள இந்த போனின் விலை ரூ.24,999 மட்டுமே. கருபு, கோல்ட் கலர்களில் உருவாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் கடந்த 17ஆம் தேதி முதல் இந்தியாவில் கிடைக்கின்றது. தண்ணீர் உள்ளே புக முடியாதவாறான அமைப்பு, நானோ கோட்டிங், பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்ற சிறப்பு அம்சங்களை இந்த போன் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Samsung may soon pull the plug on its explosive Note 7, but there are still plenty of big-screen phones out there to choose from. Here are 5 best alternatives.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்