பட்டையை கிளப்பும் சோனி எக்ஸ்பீரியா இசட்5 கேமரா..!!

By Meganathan
|

சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா இசட் 5 கருவியை இந்திய சந்தையில் சமீபத்தில் தான் அறிமுகம் செய்தது. இந்த கருவியானது 23 எம்பி ப்ரைமரி கேமரா 1/2.3 எக்ஸ்மோர் ஆர்எஸ் சென்சார் மற்றும் f/2.0 G லென்ஸ் கொண்டிருக்கின்றது.

இந்த கருவியின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.2 இன்ச் ஐபிஎஸ் ட்ரைலூமினஸ் டிஸ்ப்ளே 1080*1920 ரெசல்யூஷன் மற்றும் கீரல் ஏற்படாத கிளாஸ் மற்றும் ஓலியோஃபோபிக் கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

இதோடு குவால்காம் MSM8994 ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர், ஆக்டா கோர் சிபியு, 3ஜிபி ரேம் கொண்டிருப்பதோடு ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1.1 இயங்குதளமும் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளத்திற்கு அப்கிரேடு செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சோனி எக்ஸ்பீரியா இசட்5 கருவியானது 2900 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

சோனி எக்ஸ்பீரியா இசட்5 கேமரா சிறப்பம்சங்கள்
23 எம்பி எக்ஸ்மார் ஆர்எஸ் மொபைல் சென்சார் மற்றும் அதிநவீன மென்பொருள் பொருட்களின் அருகாமையில் கொண்டு செல்வதோடு, எவ்வித பொருள் அல்லது இடங்களையும் அதிக துல்லியத்துடன் படமாக்கும் திறன் கொண்டிருக்கின்றது.

சோனியின் மாற்றக்கூடிய லென்ஸ் கேமரா மற்றும் ஆல்பா தொழில்நுட்பம் இந்த ஸ்மார்ட்போனில் வேகமான ஆட்டோஃபோகஸ் வசதியை ஒத்துழைக்கின்றது. தற்சமயம் வெளியாகியிருக்கும் ஸ்மார்ட்போன்களை விட அதிவேக ஆட்டோஃபோகஸ் மற்றும் மனித கண் சிமிட்டல்களை விட 10 மடங்கு வேகமாக செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சோனி எக்ஸ்பீரியா இசட்5 கேமரா அம்சங்கள்

சோனி எக்ஸ்பீரியா இசட்5 கேமரா அம்சங்கள்

மேனுவல், சுப்பீரியர் ஆட்டோ, வீடியோ மற்றும் கேமரா ஆப் மோடு போன்ற ஆப்ஷன்கள் வேகமான செயல்பாட்டை வழங்குகின்றது.

கேமரா ஆப் மோடு

கேமரா ஆப் மோடு

புதிதாக வழங்கப்பட்டுள்ள கேமரா ஆப் மோடில் பல்வேறு புதிய ஸ்பெஷள் எஃபெக்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 4கே வீடியோ வைட் பேலன்ஸ் செட்டிங்ஸ், எச்டிஆர் மற்றும் ஐஎஸ்ஓ என பல அம்சங்கள் அடங்கும்.

அரங்கம்

அரங்கம்

சுப்பீரியர் ஆட்டோ மோடு மூலம் கூடுதல் மின் விளக்குகள் கொண்டு அரங்கின் உள் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.

மேனுவல் மோடு

மேனுவல் மோடு

க்ளோஸ் அப் புகைப்படங்களை அதிக துல்லியமாக வழங்கும் கேமரா மிகவும் சிறப்பாகவே இருக்கின்றது. இதோடு கூடுதலாக வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள் புகைப்படங்களுக்கு மேலும் அழகூட்டுகின்றது என்றே கூற வேண்டும்.

பகல் வெளிச்சம்

பகல் வெளிச்சம்

வெளி இடத்தில் பகல் நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் நிறங்கள் அற்புதமாக தெரிவதை பார்க்க முடியும்.

குறைந்த வெளிச்சம்

குறைந்த வெளிச்சம்

குறைந்த வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் எதிர்பார்த்ததை விட நன்றாகவே வந்திருக்கின்றது. மேலும் இந்த புகைப்படம் அதிக துல்லியமாக இருப்பதோடு குறைந்த வெளிச்சத்திலும் அதிக நிறங்களை பிரதிபிலிக்க தவறவில்லை.

இரவு நேரம்

இரவு நேரம்

இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களில் சுப்பீரியர் ஆட்டோ, மேனுவல் மற்றும் நைட் மோடு போன்ற ஆப்ஷன்கள் பயன்படுத்தப்பட்டன.

ஆக்மென்டெட் ரியாலிட்டி (Augmented Reality)

ஆக்மென்டெட் ரியாலிட்டி (Augmented Reality)

இந்த ஏஆர் மோடு குழந்தைகளுக்கு அதிகம் பிடிக்கும். இதில் ஃபேரி டேல், சோட்டா பீம் மற்றும் டைனோசர் போன்ற தீம்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஏஆர் மாஸ்க் மற்றும் செல்ஃப் போர்ட்ரெய்ட் மோடு

ஏஆர் மாஸ்க் மற்றும் செல்ஃப் போர்ட்ரெய்ட் மோடு

விளங்குகள் மற்றும் மாற்று முகங்களை வழங்கும் இந்த ஸ்டைல் போர்ட்ரெய்ட் மோடு அனைவருக்கும் பிடிக்கும் என்பதில் மறுப்பு ஏதும் இருக்க முடியாது.

போக்கிரவுன்டு டீஃபோகஸ்

போக்கிரவுன்டு டீஃபோகஸ்

இந்த ஆப்ஷன் குறிப்பிட்ட பொருளை மட்டும் ஃபோகஸ் செய்து பேக்கிரவுண்டினை தாணாக ப்ளர் செய்து விடும். இதனால் புகைப்படம் அதிக அழகாக காட்சியளிக்கும்.

Best Mobiles in India

Read more about:
English summary
New Features of Sony Xperia Z5 Camera. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X