கூகுள் ப்ராஜக்ட் அரா : இது எப்படி அண்ணே வேலை செய்யும்.??

By Meganathan
|

எதை செய்தாலும் புதுமை, வித்தியாசம் இது தான் கூகுள் நிறுவனத்தின் வழக்கம். எந்த சேவையானலும் மக்களுக்கு புதிய கோணத்தில் வழங்குவதில் அதிக முக்கியத்துவம் அளிப்பதால் இந்நிறுவனத்தின் பெரும்பாலான சேவைகள் உலகளவில் வெற்றி பெறுகின்றன.

கூகுள் ப்ராஜக்ட் அரா : இது எப்படி அண்ணே வேலை செய்யும்.??

அந்த வரிசையில் கூகுள் நிறுவனம் சில காலமாக பணியாற்றி வரும் திட்டம் தான் ப்ராஜக்ட் அரா ( Project ARA ). தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட்போன் கருவிகளின் அடுத்த தலைமுறை போன்களை தயாரிப்பதே ப்ராஜக்ட் அரா திட்டத்தின் நோக்கம் ஆகும்.

மாட்யூலர் போன் : இன்று ஸ்மார்ட்போன்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இவைகளுக்கு அடுத்த தலைமுறை கருவிகள் மாட்யூலர் போன் என அழைக்கப்பட இருக்கின்றன. இந்த புதிய வகை கருவிகளானது லெகோ ஸ்டைலில் வடிவமைக்கப்படுகின்றது. அதாவது கருவிகளின் பாகங்களை தனித்தனியே பொருத்தி கொள்ளும் வசதி ஆகும். இவை திரை, கேமரா, ஸ்பீக்கர் உள்ளிட்ட பாகங்களை பயன்பாடுகளுக்கு ஏற்ப பொருத்தி கொள்ளும் திறன் கொண்டிருக்கும்.

இது எப்படி சாத்தியமாகும், இது எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும், இதன் விலை எவ்வளவு என்ற கேள்விகளுக்கு தற்சமயம் வரை கூகுள் தரப்பில் அதிகாரப்பூர்வ பதில்கள் ஏதும் வழங்கப்படவில்லை.

கூகுள் ப்ராஜக்ட் அரா : இது எப்படி அண்ணே வேலை செய்யும்.??

சோதனையில் இருக்கும் திட்டம் குறித்த அறிமுகம், மற்றும் திட்டம் சார்ந்த சில தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றது. இவை ஒவ்வொரு முறையும் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைக்கின்றதை தவிற வேறு எதையும் செய்வதில்லை என்பதே உண்மை.

எப்படியும் இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகிவிடும் என்ற நம்பிக்கையில் கூகுள் நலம் விரும்பிகள் மற்றும் ஸ்மார்ட்போன் வல்லுநர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இவர்களின் காத்திருப்புக்கு மத்தியில் ப்ராஜக்ட் அரா குறித்து தற்சமயம் வரை கிடைத்திருக்கும் சில தகவல்கள்...

கூகுள் ப்ராஜக்ட் அரா : இது எப்படி அண்ணே வேலை செய்யும்.??

சிறப்பம்சம் : வேண்டிய சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை தேர்ந்தெடுத்து, சில தியாகங்களை செய்து அதன் பின் அவைகளை வாங்க பணம் சேர்த்து அதன் பின் கருவியை வாங்கும் நிலைக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக ப்ராஜக்ட் அரா இருக்கும்.

கூகுள் ப்ராஜக்ட் அரா : இது எப்படி அண்ணே வேலை செய்யும்.??

தேவை : உங்களது தேவைக்கு ஏற்ற, மனதிற்கு பிடித்த அம்சங்களை தேர்வு செய்து உங்களுக்கு தோன்றிய நேரத்தில் அவைகளை பெற்று கொள்ள ப்ராஜக்ட் அரா வழி செய்யும். குறைந்த எடை, அழகிய வடிவமைப்பு, வித்தியாசமான தோற்றம் மற்றும் பல அம்சங்களை ப்ராஜக்ட் அரா வழங்கும்.

கூகுள் ப்ராஜக்ட் அரா : இது எப்படி அண்ணே வேலை செய்யும்.??

நெக்சஸ்.??
இது கூகுள் நெக்சஸ் கருவிகளை போன்று இல்லாமால், கூகுள் நிறுவனத்தின் மற்றும் ஓர் திட்டம் ஆகும். மேலும் இவை மாட்யூலர் போன் என அழைக்கப்படுகின்றன என்பதால், நெக்சஸ் ஸ்மார்ட்போன் கருவிகளுக்கும் இவைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்பதே உண்மை.

கூகுள் ப்ராஜக்ட் அரா : இது எப்படி அண்ணே வேலை செய்யும்.??

விலை
இன்னும் தயாரிப்பு மற்றும் சோதனைகளில் இருக்கும் ப்ராஜக்ட் அரா கருவிகளின் விலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் சந்தை வல்லுநர்களின் எதிர்பார்ப்பு படி இந்த கருவிகளின் குறைந்த பட்ச விலை ரூ.13,331 இல் இருந்து துவங்கி ஹார்டுவேர் மற்றும் இதர அம்சங்களுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிவித்துள்ளனர்.

விரைவில் இந்த கருவிகள் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் எல்லோரையும் போல் நாமும் காத்திருக்க தான் வேண்டும்..

Best Mobiles in India

English summary
Google Project Ara, Next gen smartphones in making Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X